பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாபப் புரவியும் தனிவேலும் ஆனால் மிகப் பெரிய வீரம் உடையவனுக்கு இறுதியாக நமக்குத்தான் வெற்றி உண்டாகும் என்ற எண்ணம் உறுதியாகத் தோன்றும். இனிமேல் செய்யப் போகின்ற போருக்குரிய வெற்றி இப்போதே வந்து விட்டதாக எண்ணி உவகை கொள்வான். இராமன் செயல் இராமபிரான் இலங்கையின்மேல் படை எடுத்துச் செல்லப் போகிறான். இக்கரையில் அவனை விபீஷணன் வந்து கண்டான்; புகல் அடைந்தான். இராமன் அப்போது அவனை அடைக்கல மாக ஏற்றுக் கொண்டு இலங்கை அரசு அவனுக்குரியது என்று கூறி முடி கவித்தான். இன்னும் இலங்கையில் இராமன் அடி வைக்கவில்லை. இராவணனோடு போர் செய்யவில்லை. அவனைத் தோல்வியுறச் செய்யவில்லை. அப்படி இருந்தும் இராவணனை வென்றுவிட்டது போல எண்ணி இலங்கை அரசை விபீஷண னுக்குக் கொடுத்தான். இது நிச்சயமாக அவனை வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையினால் உண்டான செயல். இதனை, 'கொள் ளார் தேஎம் குறித்த கொற்றம்' என்று தொல்காப்பியம் கூறும். கழல்கட்டும் பெருமான் நெஞ்சத் திண்மை உடையவர்கள் தாம் எண்ணியவற்றை எண்ணியாங்கு நிறைவேற்றுவார்கள். ஆதலின் இத்தகைய செயல் அவர்களிடத்தில் பொருத்தமாக அமையும். அந்த வகையில் முருகப் பெருமான் சூரபன்மனோடு போர்புரியவேண்டுமென்று எண்ணிப் போரிடுவதற்கு முன்னே, வெற்றி வந்தவுடன் எந்த அடையாளத்தை அணிந்து கொள்வானோ அதனை இப்போதே புனைந்து கொள்கிறான். நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் கிடைக்கும் என்ற உறுதி நமக்கு இருக்கிறது. இன்றைக்கே வைரக் கடைக்குச் சென்று நாளைக்குப் பணம் தருவதாக வாக்குறுதி அளித்து வைரக்கம்மலை வாங்கி வந்து மனைவிக்கு அணிகிறோம். நிச்சயமாக அடுத்த நாள் பணம் கிடைக்கும் என்ற உறுதியே இந்தச் செயலுக்குக் காரணம். இன்று நினைப்பது நாளைக்கு நடக்கும் என்ற உறுதி இல்லாத நாமே பணம் கிடைத்துச் செய்யவேண்டியதைப் பணம் கிடைக்காமலே செய்ய முன் வருகிறோம். நமக்கு அவ்வளவு சாமர்த்தியம் இருக்கிறது. 33