பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்கார்ச் சொற்பொழிவுகள் - 6 வருகிறார். காட்டில் வாழ்கின்ற விலங்கினங்களால்தான் மனிதர் களுக்குத் துன்பம் உண்டாகும். புலி, கரடி, யானை என்பவை மனிதனைத் துன்புறுத்தும் விலங்கினங்கள். கந்தர் அலங்காரத்தைத் தெரிந்து கொண்டவர்களுக்கு அந்த விலங்கினங்களாலும் துன்பம் இல்லையாம். கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் தமிழ் நாட்டில் சிங்கம் அதிகமாக இல்லையாதலால் அதைச் சொல்லாமல் புலி, கரடி, யானை என்று சொன்னார். கற்று அறிந்தவர் இந்தப் பயனைப் பெறுகின்றவர்கள் யார்? கந்தர் அலங்காரத்தைப் படித்து, அதில் உள்ள செய்யுட்களை நன்றாக உணர்ந்து, அருணகிரியார் காட்டும் சாதனங்களைப் பயின்று, மனத்தை அடக்கி, பின்பு இறைவனுடைய திருவருளைப் பெற்ற வருக்கே இந்தப் பயன் வரும் என்று சொல்லவில்லை. அலங்கார நூற் கவிகளில் ஒன்றையாவது நன்கு கற்று அறிந்தவருக்குக்கூட இந்தப் பயன் உண்டாகும் என்று சொல்கிறார். கந்தன் நன்னூல், அலங்காரம் நூற்றுள் ஒரு கவிதான் கற்று அறிந்தவரே. கந்தனுடைய அலங்காரம், நல்ல நூலாகிய அலங்காரம். கந்தனைச் சொல்லாலே அழகு படுத்தும் நூலுக்குக் கந்தர் அலங்காரம் என்ற பெயர் வந்தது. இது நல்ல பயனைத் தரும். ஆதலால் நல்ல நூல் ஆயிற்று. இங்கே நூல் என்பது பனுவல் என்ற பொருளில் வந்தது. பழங்காலத்தில் நூல் என்பது இலக்கணம் ஒன்றுக்குத் தான் பெயராக இருந்தது. பிற்காலத்தில் எல்லா வகையான பனு வல்களுக்கும் வந்தது. அருணகிரியார் காலத்திலேயே நூல் என்ற பெயர் இலக்கண இலக்கியங்கள் எல்லாவற்றையுமே குறித்தத னால், இந்தப் பிரபந்தத்தை நூல் என்று சொன்னார். நன்னூல் என்று தம்முடைய நூலைத் தாமே சொல்லலாமா என்ற கேள்வி எழும். முருகப்பெருமானுடைய புகழைச் சொல் வதனால் இது நல்ல நூல் என்பதில் ஐயம் இல்லை. கங்கையில் உள்ள தண்ணீரை ஒரு மன்னன் தங்கக் கிண்ணத்தில் எடுத்து வருகிறான். வேறு ஒரு செல்வன் வெள்ளிக் கிண்ணத்தில் எடுத்து 452