பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன் வருகிறான். பின்னும் ஒரு வியாபாரி வெண்கலக் கிண்ணத்தில் எடுக்கிறான். ஓர் ஏழை மண் சட்டியில் எடுத்து வருகிறான். எடுக்கின்ற பாத்திரங்கள் வெவ்வேறாக இருந்தாலும் தூயனவாக இருந்தால் எடுத்துவரும் கங்கை எல்லாவற்றிலும் ஒன்றுதான். அதுபோல் பாடுபவர்களுடைய நிலை எப்படி இருந்தாலும் தூய்மையான மனத்தோடு பாடினால் கந்தப்பிரானுடைய புகழ் எப்போதும் நன்மையையே தரும். ஆகையால், கந்தன் நன்னூல் அலங்காரம் என்று சொன்னார். தாம் பாடியதனால் நல்ல நூல் என்ற எண்ணத் தில் சொல்லவில்லை; கந்தனுக்கு அலங்காரமாக இருப்பதால் இது நல்ல நூல் ஆயிற்று என்று சொன்னார். இதனை நூறு என்ற வரையறையுடன் பாடினார். ஆகையால், நூற்றுள் ஒரு கவிதான் கற்று அறிந்தவரே என்று பாராயணம் செய்பவருடைய முறையைச் சொல்கிறார். கற்றல் வேறு, ஒதுதல் வேறு, படித்தல் வேறு. ஒரு முறை படிப்பது படித்தல். பலமுறை படித்தல், ஒதுதல். பொருள் தெரிந்து படித்தல், கற்றல். பொருளில் உள்ள கருத்தை நன்கு உணர்ந்து, அதனைப் பிறருக்கும் சொல்கின்ற ஆற்றல் பெற்று, அதன்படி ஒழுகுகின்றவர்கள் அறிந்தவர்கள். இங்கே அறிந்தவர் என்பது ஓதி உணர்ந்தவர் என்றே பொருள் செய்வதற்குரியது. சர்க்கரையைப் பற்றித் தெரிந்து கொள்வது வேறு; அதன் சுவையை உணர்ந்து கொள்வது வேறு. அந்த வகையில் ஒரு கவியையாவது பலகாலம் படித்து அதன் பொருளை எல்லாம் நன்கு தெரிந்து, உள்ளத்தில் பதித்துத் தெளிந்து, பிறரையும் தெளிவிக்கும் ஆற்றல் பெற்று, அதனால் பெறக்கூடிய ஒழுக்கத்தில் நின்று பயன் பெறுவதையே கற்று அறிதல் என்று இங்கே சுருக்கமாகச் சொல்கிறார். ஒரு கவி ஒரு பாட்டைக் கற்ற மாத்திரத்தில் இத்தகைய நற்பயன்கள் எல்லாம் எப்படிக் கிடைக்கும்? மனிதர்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு நல்ல குணத்தை மேற்கொண்டாலேயே மற்ற நல்ல குணங்கள் எல்லாம் அதனோடு சாரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். மெய்யையே பேசிய அரிச்சந்திரனுக்குப் பிற க.சொ.V1-29 453