பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவரும் தொண்டு 1. அச்சம் உடையவனுக்கு இன்பந் தரும் பொருள்கள் கிட்டினும் அவற்றை நுகர்ந்து மகிழும் மனநிலை இராது. மறுநாள் தூக்கிலிட வேண்டிய குற்றவாளிக்கு அறுசுவை யுண்டியை அளித்தால் அதை அவன் தக்க வண்ணம் சுவைத்து உண்ண முடியாது; அடுத்த நாள் உயிரை இழக்கப் போகிறோம் என்ற அச்சமே அவனுடைய உள்ளத்தில் இருந்து கொண்டிருக் கும். அச்சம் உண்டாவதற்குக் காரணமான நிகழ்ச்சியை மாற்றும் வலிமை அமைந்தால் அச்சம் நீங்கும். மரண பயம் மரணம் வரும் என்ற எண்ணம் நம் உள்ளத்தில் அழுத்த மாகப் பதியும்போது நமக்கு அச்சம் உண்டாகும். அது இடை விடாமல் இருக்கும். அதனை மாற்றிக் கொள்ள, அச்சத்துக்குக் காரணமான செயலை மாற்றும் வலிமை நமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எழவேண்டும். மரண பயத்தை நீக்கும் முருகப் பெருமானுடைய துணை நமக்கு உண்டு என்று உறுதியான மன நிலை வேண்டும். அந்த உறுதி எளிதில் வராது. பல பெரியோர்கள், 'மரணத்துக்கு அஞ்ச வேண்டாம்; இறைவன் காப்பாற்றுவான்' என்று சொன்னவற்றைப் படித்துச் சிந்தித்து நம்பிக்கை கொள்ள வேண்டும். அந்தப் பெரியோர்களுடைய வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். மன உறுதி துன்பம் வந்தால் அதை வென்றுவிடலாம் என்று உறுதியாக இருப்பதே ஒரு வலிமை, நெஞ்சத்திண்மையே அதற்குக் காரணம்.