பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவரும் தொண்டு வாழ்விலேயே நம் கண்முன்னே கைமேல் பலன் கிடைக்கும் என்று அவர் சொல்கிறார். மைவரும் கண்டத்தர் மைந்த கந்தா என்று வாழ்த்தும் இந்தக் கைவரும் தொண்டன்றி மற்று அறியேன். மருந்து விரைவில் பலிக்குமானால் கைகண்ட மருந்து என்று சொல்கிறோம். கைகண்ட தெய்வம் என்று சொல்வதும் உண்டு. பலகாலமாகப் பலித்துவருவதை கைவந்தது என்று கூறுவார்கள். கைமேல் பயன் தரும் தொண்டை, கைவரும் தொண்டு என்கிறார். கைமேல் பலன் கிடைக்கும் கைங்கரியம் என்பது அதன் பொருள். இப்போது செய்கிற காரியத்திற்குப் பின்னால் பயன் உண்டு என்று நம்பிச் சாத்திரங்களைப் படித்து முயற் ! களைச் செய்து கொண்டிருக்கிறோம். பயன் நெடுங்காலம் கழித்துக் கிடைப்பதாயிருந்தால் வேலை செய்கிறவர்களுக்கு இப் போது உற்சாகம் இருப்பது இல்லை. செய்கிற வேலைகளுக்கு உடனே பயன் கிடைக்க வேண்டுமென்று நினைக்கிற காலம் இது. 'கையிலே காசு, வாயிலே தோசை' என்று ஒரு பழமொழி உண்டு. தாம் செய்கிற காரியங்களுக்கு உடனுக்குடன் பலன் கிடைக்க வேண்டுமென்ற ஆசையை இக்காலத்தில் வளர்த்து வருகிறார்கள். அத்தகைய மனப்பாங்கு உடையவர்களுக்கும் நம்பிக்கை ஊட்டும்படி அருணகிரியார் இந்தப் பாட்டைச் சொல்லியிருக்கிறார். 'இறைவனை நம்புங்கள், அவனுடைய திருநாமத்தைச் சொல்லி வாழ்த்துங்கள். அது கைமேல் பலன் தரும். நான் கண்டுகொண்ட கைவரும் தொண்டு இது என்று உபதேசம் செய்கிறார். அவர் செய்யும் உபதேசம் வெறும் கற்பனை அன்று. உண்மை என்பதைத்தான் நான் முன்னே சொன்ன அமெரிக்க நாட்டு வெளியீடும் உறுதி செய்கிறது. முயற்சியும் பயனும் சில காரியங்கள் செய்தால் சில காலம் கழித்தே பயன் உண்டாகும். சாப்பிட்டவுடன் பசி தீருகிறது. அதுபோல் மருந்து உண்டவுடன் நோய் தீராது. சிறிது நாள் ஊறி உடம்பிலுள்ள தீங்குகளை எல்லாம் போக்கின பிறகுதான் மருந்தின் பயன் க.சொ.wi-5 53