பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 உறுதி இல்லாதவர்கள் எந்தச் சமயத்தில் யாரால் துன்பம் வருமோ என்று அஞ்சுவார்கள். அப்படி அஞ்சும்போது தங்கள் சக்தியை இழக்கிறார்கள். ஆகையால் பயன் பெறுவது இல்லை. கால் இருந்தும் பயன் பெறுவதில்லை. கண் இருந்தும் குருடர் களாக இருக்கிறார்கள். அவர்கள் உடம்போடு உயிர் ஒட்டி வாழ்ந்திருந்தாலும் ஒவ்வொரு நாளும் பலமுறை இறந்தது போன்ற துன்பத்தை அநுபவிக்கிறார்கள். கோழைகள் பலமுறை சாகிறார்கள் என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் செத்துக் கொண்டிருக் கும் கோழைகளுக்கு அச்சத்தைப் போக்கிக் கொள்வதற்குரிய துணை கிடைத்தால் அந்த நிலை மாறிவிடும். அந்தத் துணை இறைவன் திருவருள்தான். இறைவன் திருவருள் இல்லாத வரைக்கும் உலகத்தில் எல்லாப் பொருளும் அச்சத்தைத் தந்து கொண்டிருக்கும். நலம் செய்வதென்று சொல்லும் பணம் கூட மிகுதியான கவலையை அளிப்பதாகவும், உயிரை இழப்பதற்குக் காரணமாகவும் இருப்பதை உலக வாழ்வில் நாம் பலமுறை கண்டிருக்கிறோம். மனைவியைக் கணவன் மரணம் அடையச் செய்வதையும், கணவனை மனைவி மரணம் அடையச் செய் வதையும், பிள்ளை தந்தையை மரணம் அடையச் செய்வதையும், இப்படி நெடுங்காலம் ஒட்டி உறவாடிய தோழர்களே பொருள் காரணமாகக் கொலை செய்பவர்களாக மாறுவதையும் பல ருடைய வரலாற்றிலிருந்து நாம் அறிகிறோம்; இன்னும் கேட்க இருக்கிறோம். ஆகையால் பணம் படைத்தவனே பலம் அடை வான் என்று உறுதி உண்டாவதில்லை. அரசர்களுக்கு எப்போதும் சந்தேகந்தான். ஒற்றின் மேல் ஒற்று வைத்து அவர்கள் ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள். "தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணிரும் அனைத்து” என்று வள்ளுவர் சொல்கிறார். கும்பிடுபவர்களைக்கூட நம்பக் கூடாதாம். அவர்கள் கும்பிடும் கைக்குள்ளே ஆயுதம் ஒளித்து இருக்குமாம். மகாத்மா காந்தியைக் கொன்றவன் முதலில் --கும்பிடத்தானே கும்பிட்டான்? அந்தக் கும்பிட்ட கையிலேதான் அவரைக் கொன்ற ரிவால்வர் இருந்தது. 6○