பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிய வழி முடியாது. சுவாசத்தை இடைகலை பிங்கலை என்று மாற்றி மாற்றிப் பயிற்சி செய்ய வேண்டும். இப்படிச் சுழுமுனையில் மூச்சு ஒடப் பழகி பிறகு சுவாச பந்தனம் செய்தால் மூலாதாரத்தில் சூடு எழும். அங்குள்ள மூலாக்கினியை எழுப்ப வேண்டும். மூலாதாரம் முதல் ஆதாரம். அங்கே அக்கினி எழும்பியவுடன் குண்டலினி சக்தி நீண்டு நமக்கு வழிகாட்டும். இந்த யோக மார்க்கத்தைக் குண்டலினி யோகம் என்றும் சொல்வார்கள். ஆறு ஆதாரம் உடம்பில் ஆறு ஆதாரங்கள் இருக்கின்றன. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என் பவை அவை. ஒவ்வோர் ஆதாரமும் ஒவ்வொரு கமல வடிவாக இருக்கிறது. மூலாதாரம் நான்கிதழ்க்கமலம்; சுவாதிஷ்டானம் ஆறிதழ்க்கமலம்; மணிபூரகம் பத்து இதழ்களை உடையது; அநாகதம் பன்னிரண்டு இதழ்களையுடையது; விசுத்தி பதினா றிதழ்க் கமலம்; ஆக்ஞை இரண்டிதழ்க்கமலம், மூலாதாரமானது குஹ்யஸ்தானம்; சுவாதிஷ்டானம் என்பது அடிவயிற்றுக்குப் பின்னால் இருப்பது; உந்திக்கமலம் மணிபூரகத்தைச் சார்ந்தது; இதய பீடமே அநாஹதம்; கழுத்து விசுத்தி, புருவநடு ஆஞ்ஞை. சூரியனைக் கண்ட தாமரை மலர்வது போலக் குண்டலினி சக்தி மேலே எழும்பி வரும்போது ஆதாரக் கமலங்கள் மலர் கின்றன. ஒவ்வோர் ஆதாரத்திலும் ஒவ்வொரு தெய்வம் உண்டு. மூலாதாரத்திற்கு உரியவராக இருப்பவர் கணபதி, பிரமனையும் சொல்வர். திருமால், ருத்திரன், ஈசானன், சதாசிவன், அர்த்த நாரீசன் என்பவர் மற்ற ஆதாரங்களின் தெய்வங்கள். பிரானா யாமம் மூச்சுப் பயிற்சி; உண்மையினின்று மனம் விலகாதிருக்கப் பயிலுவது பிரத்தியாகாரம்; மனத்தை ஒரு பொருளில் நிறுத்தல் தாரணை; அதனின்றும் நழுவாமல் நிற்றல் தியானம்; யாவும் மறந்து இன்புறல் சமாதி. இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்னும் மூன்று நாடி களும் நெற்றிப் பொட்டாகிய ஆஞ்ஞையில் இணைகின்றன. குண்டலினியை அம்பிகையினுடைய சக்தி என்று சொல்லி, பராசக்தியை வழிபட்டு யோகம் கைகூடுகிற மக்கள் இருக்கிறார் 73