உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கந்தவேள் கதையமுதம் ஒருவர் தூத்துக்குடிக்குக் காரில் ஏறி வருகிறார். திருநெல் வேலியிலிருந்து புறப்பட்டது முதல், "தூத்துக்குடி. வந்துவிட்டதா, தூத்துக்குடி வந்துவிட்டதா?" என்று அடிக்கடி கேட்கிறார்." இன்னும் வரவில்லை" என்று நண்பர் சொல்கிறார். தூத்துக்குடி வந்தபோது, தூத்துக்குடி வந்து விட்டது" என்கிறார். தூத்துக்குடியை நோக்கி அவர் வந்தாரா? துத்துக்குடி அவரை நோக்கி வந்ததா? ஆனால் நாம் இப்படித் தான் பேசுகின்றோம். தூத்துக்குடியின் காட்சி, தூத்துக்குடியின் சூழல் அநுபவம், வரும்போது தூத்துக்குடி வந்த தாகச் சொல்கிறோம். தோண்டுகிறார். மற்றோர் உதாரணம். ஒருவர் கிணறு "தண்ணீர் வந்துவிட்டதா?" என்று நண்பர் கேட்கிறார். "இன்னும் வரவில்லை என்று வெட்டுகிறவர் சொல்கிறார். மேலும் மூன்று அடி ஆழம் வெட்டியவுடன் தண்ணீர் வருகிறது. "தண்ணீர் வந்து விட்டது" என்கிறார். தண்ணீர் இவரை நோக்கி வந்ததா? தண்ணீரை நோக்கி இவர், மேடாக இருந்த மண்ணை வெட்டி வெட்டிக் கீழே போனாரா? மேலே இருந்த மண்ணைத் தோண்டித் தோண்டி ஆழ மாகக் கீழே போனபோது தண்ணீரின் காட்சி, அநுபவம், வரும் போது தண்ணீர் வந்ததாகச் சொல்கிறார். இப்படிச் சொல்வதை இலக்கணை என்று சொல்வார்கள். எங்கும் ஆண்டவன் இருக்கிறான்; என்றாலும் நாம் அதை உணர் வதில்லை. எங்கும் காற்று இருந்தாலும் அதை உணராத நமக்கு மின்விசிறி நம்மேல் காற்றை உறைக்கச் செய்கிறதுபோல, ஆண்டவன் எங்கும் இருந்தாலும் அதை உணராத நமக்கு, அவன் இருக்கிறான் என்ற உணர்வை உண்டாக்குகிற இடங்களாகக் கோவில்கள் இருக்கின்றன. அந்தக் கோவில்களைக் காணும்போதும், அங்குள்ள மூர்த்தியை நினைந்து பாடும்போதும் நம் உள்ளத்தில் ஆண்டவனைப் பற்றிய எண்ணம் அழுத்தமாக உண்டாகிறது. எனவே கோவில்கள் என்பன இறைவனை நினைப்பூட்டுகிற அடையாளங்கள். குறிகளும் அடையாளமும் கோயிலும்" என்று அப்பர் சுவாமிகள் பாடுகிறார்.