பார்வதியின் தவம் $1 ஆண்டவனுடைய கோவில்கள் மின்விசிறிகளைப் போன்றன என்று சொன்னேன். மின்சார விசிறிகளுக்கு ஓர் அமைப்பு இருக்கிறது. விக்கிரகங்களுக்கும் சில வகையான அமைப்புகள் இருக்கின்றன.ஆகமங்களும், சிற்ப சாத்திரங்களும் அவற்றைச் சொல்கின்றன. ஆனால் கோவில் கட்டி அதில் விக்கிரகம் வைத்து விட்டாலே அது கோவிலாகிவிடாது. கும்பாபிஷேகம் வேண்டும்; நித்திய பூஜை செய்ய வேண்டும். செய்ய முதல் வகுப்புப் பெட்டியில் ஒரு பையன் வந்துகொண்டிருந்தான். அதே பெட்டியில் ஒரு செட்டியார் ஐந்நூறு ரூபாய் கொடுத்து ஒரு மின் விசிறியை வாங்கி வந்தார். சின்னப் பையன் அவரைப் பார்த்து, CL அது என்ன?" என்று கேட்டான். "யின் விசிறி'" என்றார். சில மணி நேரம் கழித்து அந்தப் பெட்டியில் இருந்த மின்விசிறிகள் ஓடவில்லை. உடனே அந்தப் பையன் செட்டியாரைப் பார்த்து, "உங்கள் விசிறியை ஓட விடுங்கள்" என்றான். அது எப்படி ஓடும்? அதற்கு மின் இணைப்புக் கொடுக்கவில்லையே!" என்றார் செட்டியார். எவ்வளவு அழகான விசிறியாக இருந்தாலும் அதற்கு மின் இணைப்பு வேண்டும். 21 அதுபோல எவ்வளவு அழகான கோவிலாகக் கட்டி, விக்கிர கத்தை வைத்தாலும் போதாது. அதற்கு ஆகம முறைப்படி கும்பா பிஷேகம் செய்யவேண்டும்; நித்திய பூஜை நடத்த வேண்டும். என்னிடம் ஓர் அன்பர் வந்து, "நடராஜா அமெரிக்காவில் இருக்கிறார்" என்றார். நடராஜரின் விக்கிரகங்களை வாங்கிக்கொண்டு போய் அமெரிக்காவில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளில் வைத்திருப் பார்கள். நான் அவரிடம், "ஐயா, அங்கே நடராஜர் இல்லை.நட ராஜரின் வடிவந்தான் இருக்கிறது" என்று சொன்னேன். "இரண்டுக் கும் என்ன வேறுபாடு?" என்று கேட்டார். 44 அங்கே நடராஜர் வடிவந்தான் இருக்கிறது. இங்கோ நடராஜர் வடிவத்திற்கு மந்திர பூர்வமாகத் தெய்வ சாந்நியத்தைச் சேர்த்து, நித்திய பூஜை செய்து வருகிறோம். மின்சக்தி இல்லாத மின்விசிறி எப்படிப் பயன் இல்லை யோ அது போல மந்திர சக்தி இல்லாத பிம்பம் வெறும் பொம்மை யாகத்தான் இருக்கும்" என்றேன். 11
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/101
Appearance