82 கந்தவேள் கதையமுதம் கோவிலிலே பிரதிஷ்டை செய்வதற்கு முன்னாலே அங்கே உள்ள விக்கிரகங்களை எல்லோரும் தொட்டுப் பார்க்கலாம். அப் போது அது வெறும் கல்லாக இருக்கும். மந்திரபூர்வமாகப் பிரதிஷ்டை பண்ணின பிற்பாடு சாந்நித்தியம் ஏறும். மந்திரபூர்வமாகச் சாந்நித்தியம் இல்லாமல் அமெரிக்காவில் உள்ள நடராஜர் வெறும் வடிவந்தான் என்று சொன்னேன். ஆகவே எனவே,கோவிலும், அதிலே உள்ள விக்கிரகங்களும் தெய்வத் தன்மை பெறவேண்டுமென்றால் மந்திரபூர்வமாகச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யவேண்டும். அப்படிச் செய்த பிறகு உண்மை யான விக்கிரகத்திற்குள் இறைவனது சாந்நித்தியம் புலப்படும். இறைவன் நினைவை உண்டாக்குவது கோவில், மயானமும் இறைவன் நினைவை உண்டாக்குவது. எத்தனை கடுமையான மனம் உடையவனாக இருந்தாலும் யாராவது சாகும்போது பிணத்தோடு சுடுகாட்டுக்குப் போனால் அங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டிருப் பான். "எல்லோரும் கடைசியில் இப்படித்தான் போவார்கள் எல்லாம் ஆண்டவன் செயல். ஆண்டனன் ஒருவன்தான் நித்திய மானவன் என்பான். இப்படி ஆண்டவன் நினைப்பை உண்டாக் குவது மயானம் என்றால் அதுவும் கோவில் அல்லவா? கட்டிட மில்லாமலே இறைவன் நினைவை உண்டாக்குகிறது. ஆகவேதான், கோயில் சுடுகாடு" என்று சொன்னார் மணிவாசகர். 23 இதனையே முதியவராக வந்த எம்பிரான், காட தேநடம் புரியிடம் கண்ணுதற் கடவுட்கே என்று சொன்னார். <5 இவ்வாறு இறைவன் சொன்னவுடன் மிகவும் கோபம் கொண்ட அம்பிகை, தக்கன் முன்பு சிவபெருமானை இழித்துப் பட்ட அநுபவம் உமக்குத் தெரியாதா ? நீர் வேதியர் வேடம் பூண்டிருந்தும் இறைவன் பெருமையைச் சொல்லும் வேதத்தை ஆய்ந்திலீர் போதும்! நீர் சொன்ன அத்தனை செயல்களும் ஆண்டவன் கருணையை உயர்த்திக் காட்டுகின்ற அடையாளங்கள் அல்லவா? என் முன்னால் நிற்காமல் போம் " என்றாள்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/102
Appearance