பார்வதியின் தவம் 83 அப்போது முதியவராக வந்த எம்பெருமான், " நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வந்தேன் " என்று சொல்ல, அதனைக் கேட்டு அம்பிகை தன் இரண்டு செவியையும் பொத்திக் கொண்டாள். உடம்பெல்லாம் பதைத்தது. இந்தக் கிழவன் போகமாட்டான். இனி நானே இந்த இடத்தை விட்டுப் போவேன்" என்று தன் திருவடி சிவக்க அங்கிருந்து புறப்பட்டாள். வஞ்சக முதல்வன் சொற்ற வாசகம் இறைவி கேளா அஞ்செவி பொத்தி ஆற்ற தழுங்கிமெய் பதைப்ப விம்மி எஞ்சலில் முதியோன் போகான்; ஏகுவன் யாளே என்னாப் பஞ்சடி சேப்ப ஆண்டோர் பாங்கரிற் படர்த லுற்றாள். தவங்காண்.38.) [அழுங்கி-வருந்தி, எஞ்சல் இல் - தன் பேச்சில் குறைவில்லாத. பஞ்சு அடி பஞ்சுபோன்ற அடி. சேப்ப - சிவக்க.] அப்போது இறைவன் தன் சோதனைகளை நிறுத்தி, விடையின் மேலே தோற்றினான். அதைக் கண்டு அம்பிகை தளர்ந்து நாணம் அடைந்து வணங்கினாள். "தேவரீரை யார் என்று தெரிந்து கொள்ளாமல் தவறு செய்து, மாயையும் தெளியாமல் அறி வில்லாது சிறியேன் பலவாறு இகழ்ந்துவிட்டேன். பொறுத்தருள வேண்டும்" என்றாள். இதே மாதிரிதான் பின்னாலே முருகப்பெரு மான் தன் வேடத்தைக் காட்டினவுடன் வள்ளியெம்பெருமாட்டி பேசுகின்றாள். எம்பெருமான் உமாதேவியைப் பார்த்து, "பெண்ணே, நீ நம் இடத்திலுள்ள அன்பினால் முன்னாலே சொன்ன எல்லாவற்றையும் நீ செய்த துதியைப் போலவே ஏற்றுக்கொண்டேன். உன்னிடத் தில் குற்றம் இருந்தால்தானே பொறுக்க வேண்டும்? அன்பு உடை யவர்கள் செய்வது எல்லாம் நல்லதுதானே ? நீ மிகவும் கடுமையான விரதத்தால் உடம்பு வருந்தினை. இனி அவ்வாறு செய்யவேண்டாம். நாளைக்கே உன்னைத் திருமணம் செய்து கொள்ள வருவேன் "என்று திருவாய் மலர்ந்தருளினான். நற்றவ மடந்தை கேண்மோ, நம்மிடத் தன்பால் நீமுன் சொற்றன யாவும் ஈண்டே துதித்தன போலக் கொண்டாம்; குற்றமுண் டாயின் அன்றே பொறுப்பது ? கொடிய நோன் பால் மற்றிளி வருந்தல்: நாளை மணஞ்செய வருதும் என்றன். (தவங்காண்.31.) (கேண்மோ - கேள். வருந்தல் - துன்புறாதே. வருதும் - வருவோம்.]
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/103
Appearance