பார்வதி திருமணம் திருமணம் பேசல் இறைவன் மலைமகளிருந்த இடத்தை விட்டு மறைந்து போனான். அப்பெருமான் பார்வதி தவம் செய்யும் இடத்திற்கு வந்து அருள் செய்ததை அங்கிருந்தவர்கள் போய்ப் பர்வத ராஜ னுக்குச் சொல்ல, அவன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். உமா தேவியை அழைத்து வரச்செய்தான். முறைப்படியாகத் திருமணம் நடத்த வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று. சிவ பெருமானும் பெண்ணைக் கொள்ளும் முறைப்படி கொள்ளவேண்டு மென்று திருவுள்ளம் கொண்டான். கைலை மலைக்குச் சென்றவுடன் அங்கிருந்த ஏழு முனிவர்களை அழைத்து, "நீங்கள் இமாசல அரச னிடம் சென்று அவனுடைய பெண்ணாகிய பார்வதியை மணம் பேசி வாருங்கள்" என்று அனுப்பினான். ஏழு முனிவர்கள் அத்திரி,பிருகு, குத்ஸர், வளிஷ்டர், கெளதமர், காசியபர், ஆங்கீரஸர் என்னும் பெயர் உடையவர்கள். இந்த ஏழு முனிவர்களும் இமாசல மன்ன னிடம் வந்து, "சிவபெருமான் உன்னுடைய பெண்ணை மணம் பேசி வரும்படி எங்களை அனுப்பினான் " என்று சொல்ல, அவன் மிகவும் களிப்பை அடைந்தான். "என்னுடைய பெண்ணாகிய உமா தேவியை எம்பெருமானுக்குத் திருமணம் செய்துகொடுத்து, என்னை யும் அடிமையாகக் கொடுப்பேன் ' என்று ஊக்கத்தோடு சொன்னான். " அப்போது அருகில் நின்ற மேனை சற்றே அஞ்சினாள். பெண்கள் எப்போதும் தம்முடைய பெண்கள் நல்ல இடத்தில் வாழ்க்கைப்படவேண்டுமென்றும், நல்ல வகையில் வாழவேண்டு மென்றும் விரும்புவார்கள். மேனை தன்னுடைய கணவனைப் பார்த்து, "பிரமாவின் புதல்வனாகிய தக்கன் தன்னுடைய குழந்தை யாகிய தாட்சாயணியைச் சிவபெருமானுக்குத் திருமணம் செய்து கொடுக்க, அவர் தம் மாமனாராகிய தக்கன் தலையையே கொண்டார் என்று கூறுவார்கள். மாமனார் என்று பாராமல் அப்படிச் செய்த அவரை எண்ணினால் என்னுடைய மனம் மிகவும் அஞ்சுகின்றது.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/105
Appearance