கந்தவேள் கதையமுதம் நம்முடைய குலமகளை அவருக்கு எதற்காகக் கொடுக்க வேண்டும் ?" என்றாள். மலரயன் புதல்வன் தன்னோர் மடந்தையை மணத்தின் நல்க அலைபுனற் சடிலத் தண்ணல் அவன்தலை கொண்டான் ஏன்பர்; நிலைமையுங் கதனை உன்னி நெஞ்சகம் அஞ்சுல் ; எங்கள் குலமகள் தனைஅ வற்குக் கொடுத்திடல் எவனோ என்றாள். (மணம் பேசு.11.) [மலர்மகன் புதல்வன்- தக்கன், சடிலம் -சடை.:] சிவபெருமானுடைய பெருமையை எண்ணாமல், தன்னுடைய மகளின் நன்மையை மாத்திரம் நினைத்து இவ்வாறு கேட்டான் மேனை. மகளிருடைய இயல்பை இது நன்றாக வெளிப்படுத்துகிறது. வந்திருக்கிறவர்களோ மகா ஞானிகள். பர்வதராஜன் அவர்கள் சொன்ன செய்தியைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியை அடைந்தான். ஆனால் தாய்க்கோ கவலை உண்டாயிற்று. பொதுவாகத் தாய்மார்களுக்குத்தான் பெண்ணைப் பற்றிய கவலை அதிகம். "பெரிய குடும்பம். பையன் எம்.ஏ.படித்திருக் கிறான். நல்ல உத்தியோகம். நிறையச் சம்பளம் வாங்குகிறான் என்று பெண்ணைப் பெற்ற தந்தையார் தம் மனைவியிடம் சொல்வார். யாராவது ஒருவர், அந்த வீட்டில் மூத்த மருமகளைச் சரியாக நடத்த வில்லையென்று சொல்லியிருப்பார். அது பெண்ணைப் பெற்ற தாய்க்கு நினைவு வரும். "அவர்கள் மூத்த மருமகளைச் சரியாக வைத்துக் கொள்ளவில்லையாமே! நாம் அந்த இடத்தில் சம்பந்தம் பண்ணலாமா?" என்று கேட்பாள். சிறிதளவு கூடச் சந்தேகத்திற்கு இடமில்லாத சம்பந்தம் வேண்டுமென்பதில் பெண்களைப் பெற்ற தாய்மார்களுக்கு மிகவும் கவனம் அதிகம். மாப்பிள்ளை ஈசுவரனாகவே இருந்தாலும், பெண்ணின் இயல்பை மேனை பெற்றிருந்தாள் என்பது இந்தப் பாட்டினால் தெரிகிறது. அலைபுனர் சடிலத் தண்ணல் அவன் தலை . கொண்டான். என்பர்' என்று மேனை சொல்வதில் ஒரு குறிப்பு இருக்கிறது. கங்கா தேவியைச் சிவபெருமானுடைய மனைவி என்று சொல்வது உண்டு.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/106
Appearance