பார்வதி திருமணம் 91 முருகனிடம் கற்றுக்கொள்ளலாம் என்று அகத்தியர் நினைத்தார். முருகனோ பரமேசுவரனைப் போன்ற மேல்மட்டத்திலுள்ளவருக்குத் தான் உபதேசம் செய்வான். அவன் 'லெவல்' அப்படி. அவன் அகத்தியருக்கு பாடம் சொல்லிக்கொடுப்பானா என்ற சந்தேகம் உண்டாகும். முருகப்பெருமான் சிவபெருமானுக்குப் பிரணவ உபதேசம் செய்ததைப்போல அகத்தியருக்கும் செய்திருக்கிறான். தமிழைக் கற்றுக் கொடுத்தான். சிவபெருமானுக்கு இரண்டு செவி களும் குளிரும்படியாக முருகன் உபதேசம் பண்ணினான். அப்படியே அகத்தியருக்கும் இரு செவிகளும் குளிரும்படியாகத் தமிழைச் சொன்னானாம். சிவனைநிகர் பொதியவரை முனிவன் அக மகிழஇரு செவிகளிலும் இனியதமிழ் பகர்வோனே !" (திருப்புகழ்.) முருகனிடம் தமிழ் பயின்றதனால் அகத்தியருக்கு மிகுந்த புலமை உண்டாகிவிட்டது. இலக்கண நூல் இயற்றும் வன்மை அவருக்குக் கிடைத்தது. அகத்தியம் என்ற இலக்கணத்தை அவர் இயற்றினார். பொதிய மலையில் ஒரு சங்கத்தை அமைத்துக் கொண்டு வாழலானார். தொல்காப்பியர் முதலியவர்கள் அவரிடம் பாடம் கேட்டார்கள். இவை யாவும் முருகன் திருவவதாரத்துக்குப் பின் நிகழ்ந்தவை. வரபூஜை இமாசலத்தில் மேனையும், பர்வதராஜனும் கமண்டலத்திலுள்ள நீரால் பரமேசுவரனுடைய திருவடிகளைக் கழுவி, மலரால் அருச்சனை செய்து, சந்தனம் மாலை சாத்தி,வர பூஜை செய்தார்கள். நம்முடைய நாட்டில் திருமணம் நடக்கிறது. மணமக்களையே உமா மகேசுவரர்களாக நினைக்க வேண்டும். மணக்கோலத்தில் இருக்கிற வரைக்கும் அவர்களிடம் தெய்வத் தன்மை இருக்கும். அதனால்தான் மாப்பிள்ளையை விடப் பெரியவராகிய மாமனார். மாமியார் அவர் காலைக் கழுவி வணங்குகிறார்கள். இந்தப் பழக்கம் உமாமகேசுவரர் திருமணத்திலிருந்து உண்டாயிற்று. திருமணம் மேனை தீர்த்தம்,சந்தனம், மலர் முதலியவற்றை அளித்தவுடன் இமயத்தண்ணல் திருவடிப்பூஜை பண்ணி, பின்னர்த் தன் பெண்ணைத்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/111
Appearance