92 கந்தவேள் கதையமுதம் தாரை வார்த்துக் கொடுத்தான். இந்த உலகத்துக்கு மகாமாதா வாக இருக்கிறவள் உமாதேவி இறைவன் பாசம் என்பது அணுவளவும் இல்லாத பரஞ்சோதி. அந்தப் பெருமான் கையில் அம்பிகையின் கையை வைத்து, "உனக்கு என் பெண்ணைக் கொடுத் தேன் " என்று வேதமந்திரங்கள் முழங்கச் சொன்னான் இமய அரசன். தண்ணீர் விட்டுத் தானம் செய்ய வேண்டும்.அப்படியே தாரை வார்த்துக் கன்னிகா தானம் செய்தான் இமாசல அரசன். இந்தச் செய்தியைச் சொல்லும் போது சிவபெருமானுடைய கருணையைக் கச்சியப்ப சிவாசாரியார் வியக்கின்றார். நாடகங்களில் பாத்திரங்களே பேசுவார்கள். காவியத்திற்கு ஒரு சிறப்பு; இடையிடையே கவிஞன் தன்னுடைய உணர்ச்சியைக் காட்டுவான். கந்தபுராணக் காவியத்தில் கச்சியப்பருடைய பக்தி உணர்ச்சி, நடுநடுவே கவிக் கூற்றாக வரும். இங்கே எம்பெருமான் கன்னிகாதானத்தை ஏற்ற செய்தியைச் சொன்னவர் இறைவன் கருனையை வியக்கிறார். கொடுப்பவன் இமய அரசன். பவன் பரமேசுவரன். வாங்கு இமாசல் ராஜன் தன் கன்னிகையாகிய பார்வதியைத் தானம் செய்தான். எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுக்கும் மகாதேவனாகிய பரமேசுவரன் கைநீட்டி வாய்கினான். மாணிக்கவாசகர் சொல்கின்றார், 87 வைத்து வாங்குவாய்" என்று. அப்படி ஆண்டவன் நம்மிடம் எல்லாவற்றையும் கொடுத் துத் தானே வாங்கிக் கொள்கிறான். எங்குன பொருளும் கோளும் ஈதலுந் தானே ஆகும் சங்கரன் உலகம் எல்லாத் தந்திடும் கன்னி தன்னை மங்கல முறையால் கொண்டான் மலைமகன் கொடுப்ப என்றல், அங்கவன் அருளின் நீர்மை ஆரறிந் துரைக்கற் பாலார். (இருக்கல்யாணம். 71.) [கோள் - கொள்ளுதல். ஈதவ் - கொடுப்பது.] உலகத்தை எல்லாம் கொடுக்கிற பரமேசுவரனுக்கே பர்வத ராஜன் தன் மகளை மங்கலமாகக் கல்யாணம் செய்து கொடுக்க, அதை அவன் ஏற்றுக் கொண்டான். இவ்வாறு சிவபெருமான் ஏற்றுக் கொண்டது அவனுடைய அபாரமான கருணையை அல்லவா காட்டுகிறது?
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/112
Appearance