பார்வதி திருமணம் கொண்டான் மலைமகன் கொடுப்ப என்றல் அங்கவன் அருளின் நீர்மை யாரறிந் துரைக்கற் பாலார்? 65 93 'தன்னாலே பாதுகாக்கப் பெறும் ஒருவனிடமிருந்து தான் வாங் குவது முறையா?" என்று கேட்கலாம். ஒருவனிடம் தானம் வாங்குவதனால் நம் கை தாழ்கிறது. இங்கே சிவபெருமான் தன் கையைத் தாழ்த்திக் கன்னிகாதானம் வாங்கினான். இதனால் அவன் மதிப்புக்குக் கேடு வராதா? வாட்டசாட்டமான கலெக்டர் ஒருவர். நல்ல கறுப்பு நிறம். யானை மாதிரி இருப்பார். அவருக்கு ஐந்து வயதில் ஒரு குழந்தை இருந்தது. அந்தக் குழந்தை செல்லமாக வளர்ந்து வந்தது. சேவக னிடம் குழந்தையை விட்டு, "விலங்குக் காட்சிச் சாலைக்குக் கூட்டிச் போய் ஜாக்கிரதையாகக் கூட்டிக் கொண்டு வா" என்றார். அந்தச் சேவகன் தன்னுடைய குழந்தையையும் அழைத்துச் சென்றான். அங்கே யானையின்மேலே சிலர் தங்கள் குழந்தைகளை ஏறச் செய்து சுற்றிவரச் செய்தனர். பல குழந்தைகள் ஏறிக் களித்தன. சேவகன் தன் குழந்தையையும் யானையின்மேலே ஏறச் செய்தான். ஆனால் கலெக்டர் குழந்தையை ஏற்றினால் ஏதாவது ஆபத்து வந்து விட்டால் என்ன செய்வது என்று அஞ்சினான். அதனால் அந்தக் குழந்தையை மட்டும் யானையின் மேலே ஏற்றவில்லை. ஒரு குழந் தைக்குக் கிடைத்தது தனக்குக் கிடைக்காவிட்டால் உடன் இருக்கும் குழந்தை மிகவும் வருத்தப்பட்டு அழும். சேவகன் தன் குழந்தையை யானையின் மேலே ஏற்றினான், தன்னை ஏற்றவில்லையே என்று கலெக்டருடைய குழந்தை வீம்பு பிடித்து அழ ஆரம்பித்தது. மெல்லச் சமாதானம் செய்து குழந்தையைச் சேவகன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வந்தான். 66 குழந்தை அழுததைக் கண்டு கலெக்டர் என்ன காரணம் என்று கேட்டார். சேவகன், யானையின் மேல் ஏற வேண்டு மென்று சொன்னான். ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று பயந்து நான் ஏற்றவில்லை. அதனால் அழுகிறான்” என்று விளக்கினான். உடனே கலெக்டர் தம்முடைய சட்டையைக் கழற்றி விட்டு, கீழே குனிந்து கொண்டு, "நான்தான் யானை; என் மேல் ஏறிக்கொள்' என்று குழந்தையைத் தம் முதுகின் மேல் ஏற்றித்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/113
Appearance