திரு அவதாரம் 101 எடுத்து நம் கைக்கு அகப்பட வந்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும். தண்ணிய அருளினால் இறைவன் இப்படி இறங்கி வருகிறான். பல்கலைக் கழகத்திலுள்ள சில மாணவர்கள் சிதம்பரத்தி லுள்ள நடராஜரைப் பார்க்க வருகிறார்கள். அவர்களுள் ஒருவர், "இது பஞ்சலோகத்தால் ஆனதா ? அல்லது செம்பின் மேல் தங்க மூலாம் பூசியதா?" என்று கேட்கிறார். மற்றொருவர், "தலையில் பாலை விட்டால் தூக்கின கால்வழியே வழியுமாமே; சென்டர் ஆப் கிராவிடி எங்கே இருக்கிறது?" என்று கேட்கிறார். பின்னும் ஒருவர், அந்த நடனம் எந்த வகை நடனம்?" என்று கேட்கிறார். இவர்கள் எல்லாம் நடராஜாவை உலோகமாகவும், செம் பாகவும், ஆடுகிற கூத்தாகவும் பார்க்கிறார்கள். அதே நடராஜ ரைக் கிழவர் ஒருவர் கண்டார். அவர், "ஆண்டவனே, ஐந்து கொடியவர்களாகிய ஐந்து இந்திரியங்களை வைத்திருக்கிற இந்த உடம்பே வேண்டாம்" என்று சொன்னவர். அவர் நடராஜரைப் பார்த்தார். 'நான் சொன்னது தவறு. எனக்கு இந்த உடம்பு வேண்டும். உன்னைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தால் மனிதப் பிறவி வேண்டும்" என்று சொன்னார். "குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயில் குமிண்சிரிப்பும் பணித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவ தே இந்த மாநிலத்தே. (அப்பர் தேவாரம்.) அவர் பார்த்த முறை வேறு, மற்றவர்கள் பார்த்த முறை வேறு. சிவபெருமானுடைய ஐந்தொழில்களையும் இந்த நடனத்தில் காணலாம். அப்படிப் பார்த்தால் ஆண்டவன் பெருமையை அறிய முடியும்.கல்லாகவும், செம்பாகவும் பார்த்தால் நம் உள்ளத்தில் எந்த உணர்ச்சியும் தோன்றாது. LL 'அறிவுடைய நாம் கல்லையும், செம்பையும் பார்த்து விக்கிரகம் என்றுதானே நினைக்கத் தோன்றும்? எப்படி இறைவனாகக் காண முடியும்?" என்று சிலர் கேட்கலாம். ஓர் உதாரணம் சொல் கிறேன்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/121
Appearance