102 கந்தவேள் கதையமுதம் நான் இருநூறு ரூபாய் கடன் வாங்கி ஓர் அன்பருக்குப் பத்திரம் எழுதிக்கொடுக்கிறேன். அந்தப் பத்திரத்தைப் பாங்கில் கொடுத்தால் செல்லுமா? நூறு ரூபாய் நோட்டு ஒன்று நம்மிடம் இருக்கிறது. மற்ற நோட்டுகளும் இருக்கின்றன. அவை எல்லாம் ஒருவகையான ப்ராமிசரி நோட்டே. அதிலே எழுதியிருப்பதைப் பார்த்தால் தெரியவரும். 1promise to pay the beater the sum of Rupees bundred' என்றுதானே இருக்கும்? கீழே ரிசர்வ் பாங்க் கவர்னர் கையெழுத்துப் போட்டிருப்பார். அது நிச்சயமாக நாண யம் அல்ல. ஒரு வகையான ப்ராமிசரி நோட்டுத்தான். ஆனால் அதையே ரூபாயாக எண்ணுகிறோம். அது செல்லும்! என்ற சந்தேகம் நமக்குத் தோன்றுகிறது இல்லை. சில சமயங்களில் நாண யத்தைவிட நோட்டையே சுலபமாக எடுத்துக்கொண்டு போகி றோம். இப்படி ப்ராமிசரி நோட்டையே நாணயமாகப் பார்ப்ப தற்குப் பகுத்தறிவு இடம் கொடுக்குமானால் இறைவனுடைய பிம்பத்தை இறைவனாகவே காண்பது முடியாத காரியமர்? எல்லாம் நம்முடைய மனப்பான்மையைப் பொறுத்தது. CL ஆகவே, ஆண்டவன் மனிதனுடைய மனத்திற்குள் புகவேண்டு மென்பதற்காக வடிவை எடுத்துக்கொள்கிறான். அப்படியானால் மற்ற மதத்தினர்கள் பக்தி பண்ணவில்லையா? தியானம் பண்ண வில்லையா?" என்று கேட்கலாம். எல்லாச் சமயத்திலும் உண்மை யான பக்தர்கள் இருக்கிறார்கள். இறைவனை மனமார நினைக்கின்ற கிறிஸ்துவர்களைப் போய்க் கேளுங்கள். நீங்கள் தியானம் பண்ணுவது உண்டா? தியானம் பண்ணும்போது எதை நினைப் பீர்கள் ?" என்று கேட்டால், "ஏசு பெருமானுடைய வடிவத்தை நினைக்கிறோம். மேரி அன்னையின் வடிவத்தை நினைக்கிறோம்' என்று சொல்வார்கள். முஸ்லிம்களும் கடவுளுக்கு வடிவம் இல்லை யென்று சொல்கிறார்கள். அவர்களுக்குள்ளே இறைவனை நினைக்கிற பக்தர்களைப் போய்க் கேளுங்கள். "கண்ணை மூடித் தியானம் செய்தால் எது ஞாபகத்திற்கு வருகிறது?" என்று கேளுங்கள். "நான் மசூதியை நினைக்கிறேன்" என்று அவர் சொல்வார். வடிவம் இல்லாவிட்டால் மனத்தில் பதியாதது என்ற உண்மையை இந்தச் செயல்கள் காட்டும். நாம் நம் வீட்டில் நடராஜா படம்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/122
Appearance