104 கந்தவேள் கதையமுதம் ஆண்டவனைக் கண்டு இன்பம் அனுபவிக்கும் நிலைக்கு ஜீவன் முத்தி என்று பெயர். நன்றாய் ஞானம் கடந்துபோய் நல்லிந் திரியம் எல்லாம்ஈர்த்து ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பி லதனை உணர்ந்து ந்துணர்ந்து சென்றாங் கின்பத் துன்பன்கள் செற்றுக் களைந்து பசையற்றால் அன்றே அப்போ தேவீடு அதுவே வீடு வீடாமே" என்று நம்மாழ்வார் இதனைச் சுட்டிக் காட்டுகிறார். சாகாமலேயே மோட்ச இன்பத்தை அடையலாம் என்று சாத்திரங்கள் சொல்லு கின்றன. ஆண்டவன் தொழுவதற் குரிய பொருள் மட்டும் அன்று; அநுப விக்கும் பொருளாகவும் இருக்கிறான், மனிதன் ஒரு பொருளை எப்படியெல்லாம் அநுபவிக்கிறான் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இரண்டு படி அரிசியைச் சமைத்து இலையில் கொட்டினால் அது பெரிய விருந்து ஆகாது. நடுவில் போடுகிற சோறு கொஞ்சமாக இருந்தாலும், சூழ வைக்கின்ற பதார்த்தங்களினாலேயே விருந்து பெருமை அடைகிறது. எத்தனைக்கு எத்தனை அந்தப் பதார்த்தங்கள் அதிகமாகின்றனவோ அத்தனைக்கு அத்தனை விருந்துக்கும் பெருமை அதிகம். "ஐந்து பொரியல், ஆறு கூட்டு, இரண்டு மூன்று சாம்பார், விதம் விதமான பட்சணங்கள், பெரிய விருந்து ஐயா" என்று பாராட்டுகிறோம்."ஏன் இப்படிப்பல வகை யாகப் பண்டங்களைச் செய்ய வேண்டும்? எல்லாம் ஒரு வயிற்றுக் குத்தானே போகின்றன? ஒரே உருண்டையாக உருட்டிச் சாப்பிட்டு விடலாமே" என்று கேட்கிறோமா? மனிதன் அறிவுடையவன். சுவை உணர்விற் சிறந்தவன். மாடும் உண்கிறது. மனிதனும் உண்கிறான். எங்கள் வீட்டுக் கொல்லையில் கீரைப் பாத்தி பயிரிட்டிருந்தேன். தளதளவென்று கீரை வளர்ந் திருந்தது. அங்கே திருவாளர் மாட்டார் புகுந்தார்.-யாரையும் மரியாதையாகச் சொல்ல வேண்டிய காலம் இது. ஆகையால் மாட்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/124
Appearance