120 அன்ன கந்தவேள் கதையமுதம் ன தற்பினர் உமையவள், எனதுபால் அமலன் தன்அ ருட்பெறு மதலைதோன் றாவகை தடுத்த பொண்ன கர்க்கிறை விரிஞ்சன்மால் முதலபுத் தேனிர் பண்ணி யர்க்கெலாம் புதல்வரின் குகெனப் பகர்ந்தாள். (துணைவர்.3) (மதலை -குழந்தை. பொன்னகர்க்கிறை - இந்திரன். விரிஞ்சன் - பிரமன். புத் தேனீர் - தேவர். பண்ணியர் மனைவிமார்.) இந்திரன், பிரமன், மால் போன்ற தேவர்கள் என்னிடத்தில் குழந்தை உண்டாகாமல் செய்தார்கள். அவர்களுடைய மனைவியர் களுக்குக் குழந்தை இல்லாமல் போகட்டும்" என்று சபித்தாள். அதுவரைக்கும் குழந்தைகள் உண்டு. மகாவிஷ்ணுவுக்குப் பிரமா வும், மன்மதனும் பிறந்தார்கள். பின்னர்க் குழந்தைகள் இல்லை. அப்போதே அம்பிகைக்குத் தெரியும், அதிகமான ஜனத்தொகை இருக்கக் கூடாது என்று. அதனால் கட்டுப்பாடு செய்துவிட்டாள் என்று தோன்றுகிறது. நாம் இப்போதுதான் குழந்தைக் கட்டுப் பாட்டை மேற்கொண்டிருக்கிறோம். " அம்பிகை பரமேசுவரனிடம் வந்து தான் சென்று மீண்ட காரணத்தைச் சொன்னாள். ஏன் போனாய்,ஏன் வந்தாய்?" என்று ஆண்டவன் கேட்கவில்லை. *உம்பர்கள் குறைகளை விண்ணப்பித்தவுடன் ஆறு பொறிகளை நீங்கள் தோற்றுவிக்க, அதன் வெம்மையைத் தாங்காமல் நான் போனேன். மீண்டும் நீங்கள் அந்த வெம்மையை அடக்கியதனால் வந்தேன் என்று அம்பிகை சொன்னாள். அப்போது பரமேசுவரன் களிப்பை அடைந்து அம்பி கையைத் தன் வாம பாகத்தில் அமர்த்திக் கொண்டான். JB கன்னி இங்ஙனம் பகர்தலும் கருணைசெய் தருளித் தன்இ டத்தினில் இருத்தினன். (துணைவர். 6.) இங்கே "கன்னி' என்று சொல்கிறார் ஆசிரியர். உயிர்கள் எல்லாம் அம்பிகையின் குழந்தைகளே. இவ்வளவு குழந்தைகள் இருந்தாலும் அம்பிகை கன்னிதான். அவள் திருவயிற்றிலிருந்து எந்தக் குழந்தையும் பிறப்பதில்லை. என்றாலும் உலகத்தை எல்லாம் அவள் பெற்றவள். இவ்வாறு சொன்னதற்குக் காரணம், எல்லா வற்றையும் உண்டாக்குகின்ற மூலப்பொருள் ஆதிசக்தி என்பது
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/140
Appearance