வீரர்களின் தோற்றம் 121 தான். உலகத்து உயிர்களை எல்லாம் ஈன்றும் கூட அவள் கன்னி யாக இருக்கிறாள். "சிவன் சத்தி தன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும் உவந்திரு வரும்பு ணர்ந்திக் குலகுயிர் அனைத்தும் ஈன்றும் பவன்பிரம சாரி யாவான் பான்மொழி கன்னி ஆவாள்" என்று சிவஞான சித்தியார் சொல்கிறது. ' நவசக்திகளின் தோற்றம் 66 எம்பெருமாட்டி வேகமாகப் போனபோது அவள் திருவடியில் அணிந்திருந்த சிலம்புகள் ஒன்றோடொன்று மோதி நவமணிகள் சிதறி விட்டன. அப்படிச் சிதறுண்ட நவமணிகளைப் பரமேசுவரன் பார்த்தான். அவற்றில் அம்பிகையின் பிம்பம் தோன்றின. இறை வன் பார்த்து, அந்தப் பிற்பங்களை நோக்கி, நீங்கள் இங்கே வாருங்கள் என்று அழைத்தான். ஒன்பது பிம்பங்களும் வடிவம் பெற்று அம்பிகையைப் போல எழுந்து வந்தன. ஒன்பது வகையான மணிகளிலிருந்து வந்த பெண்களும் ஒன்பது வகையான நிறங் களோடு இருந்தார்கள். முத்திலிருந்து வந்தவள் நித்திலவல்லி; பவளத்திலிருந்து வந்தவள் பவளவல்லி: மாணிக்கத்திலிருந்து வந்தவள் மாணிக்கவல்லி. இப்படியே கோமேதகத்திலிருந்து வந்தவள் கோமேதகவல்லி; வஜ்ரத்திலிருந்து வந்தவள் வஜ்ரவல்லி; நீலத்திலிருந்து வந்தவள் நீலவல்லி; புஷ்பராகத்திலிருந்து வந்தவள் புஷ்பராகவல்லி; வயிடூரியத்திலிருந்து வயிடூரிய வல்லியும் மரகதத்தி லிருந்து மரகதவல்லியும் தோன்றினர். இப்படி ஒன்பது மாதர்கள். ஒன்பது வடிவத்தோடும், ஒன்பது நிறத்தோடும் இறைவன் முன்னால் வந்தனர். தளிரின் மெல்லடிப் பரிபுர மாயின தணந்து மிளிரும் அந்தவ மணிகளின் ஆணையால் விமலை ஒளிரும் நல்லுருத் தோன்றின, ஐம்முகத் தொருவன் தெளிரு முச்சுடர் அகத்திடை அமர்ந்திடும் செயல்போல். (துணைவர். 7.) [பரிபுரம் - சிலம்பு. தணந்து - நீங்கி, ஐம்முகத் தொருவன் - சீவபிரான்.] இங்கே கச்சியப்ப சிவாசாரியார் ஓர் உபமானம் சொல்கிறார். அம்பிகையின் திருவடிச் சிலம்பிலிருந்து தெறித்த மணிகளில் அவளுடைய திருவுருவம் தோன்றியது எப்படி இருந்தது என்றால், சிவபெருமான் மூன்று சுடர்களிடையே அமர்ந்த செயல்போல இருந்தது என்று சொல்கிறார். 16
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/141
Appearance