உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கந்தவேள் கதையமுதம் அம்பிகை அப்படியெல்லாம் இருப்பாள். அவன் முச்சுடரின் நடுவில் இருப்பதுபோல, அம்பிகை நவமணியின் நடுவில் இருக்கிறாள். இலக்க வீரர் தோற்றம் நவமணிகளிலிருந்து வந்த நவசக்திகளை இறைவன் தன்பால் அழைக்க, அவர்கள் அவனடியில் வந்து வணங்கினார்கள். பருப்ப தக்கொடி புரைநவ சத்திகள் பரமன் திருப்ப தத்திடை வணங்கிநின் றவனிடைச் சிந்தை விருப்பம் வைத்தலும், முனிவர்தம் மகளிர்போல் விரைவில் கருப்ப முற்றனர் ; யாவதும் உமையவள் கண்டாள், [பருப்பதக்கொடி -பார்வதி. புரை - ஒத்த.] (துணைவர்!?) ஒன்பது மணிகளிலிருந்து வந்த பெண்கள் நிமிர்ந்து ஆண்டவ னுடைய அற்புதமான வடிவத்தைப் பார்த்தார்கள். இறைவன் பேரழகு உடையவன். 'சிவம் சுந்தரம்' என்று வேதம் சொல்லும். அவனுக்குச் சுந்தரமூர்த்தி என்ற பெயரும் உண்டு. மகா சுந்தர மூர்த்தியாகிய ஆண்டவனைப் பார்த்து ஒன்பது பெண்களும் வணங்கி னார்கள். அவன் அழகில் அவர்கள் மனம் ஈடுபட்டன. அப்படிப் பார்த்த மாத்திரத்தில் வயிற்றில் கர்ப்பம் ஏற்பட்டது. இதை ரிஷி கர்ப்பம் போன்றது என்கிறார் கச்சியப்ப சிவாசாரியார். உமாதேவி இதனைக் கண்டாள். வயிற்றெரிச்சலுக்கு இது போதாதா? தனக்குக் குழந்தை இல்லாமல் போய்விட்டது. ஆனால் நவசக்திகளுக்கு உண்டாகிவிட்டன. இதைக் கண்டு அம்பிகை மேலும் கோபமுற்றாள். முன்னாலே தாபத்தோடு விளங்கினாள். தேவர்களுடைய மனைவியர்களுக்குக் கர்ப்பம் உண்டாகக் தென்று முதலில் சாபம் இட்டிருக்கிறாள். இப்போது நவசக்தி களுக்குக் கர்ப்பம் உண்டாகியிருக்கிறது. அதனால் சினந்து, "உண்டான கர்ப்பத்திலிருந்து குழந்தைகள் பிறத்தல் கூடாது என்று சாபமிட்டாள். முனம்புரிந்துல களித்தவள் அனையர்பால் முதிரும் சினம்புரித்திவண் எமக்குமா ருகிய திறத்தால் களம்பூரிந்தஇக் கருப்பமோ டிருத்திர்பல் காலம் இனம்புரிந்தநீர் யாவரும் என்றுசூள் இசைத்தாள். (துணைவர்.10) சினம் புரிந்து [புரிந்து - விரும்பி. அனையர்பால் - அந்த நவசக்திகளிடம். கோபங்கொண்டு. கனம் -பாரம். இனம் புரிந்த கூட்டமாக உள்ள. சூள்-சாயம்.] .