வீரர்களின் தோற்றம் . 125 முன்பு உலகத்தை எல்லாம் அளிக்க வேண்டுமென்ற ஆசை யோடு அளித்தவள்' என்று சிவாசாரியார் சொல்கிறார். முன்பு விரும்பி அளித்தவன் இப்போது இப்போது சினக்கிறாள். நவசக்திகளின் மீது உண்டான கோபத்திலே, "எனக்கு மாறாக வந்த நீங்கள் பல காலம் இந்தக் கர்ப்பத்தோடு விளங்குங்கள் ' என்று சாப மிட்டாள். அந்த ஒன்பது பேர்களுடைய கர்ப்பத்திலும் வீரர்கள் இருந்தார்கள். ஆவ நெல்லையில் நடுக்கமுற் றஞ்சியே அங்கண் மேவு மாதர்மெய் வியர்த்தளர்; அவ்வியர்ப் பதனில் தேவ தேவன தருளினால் தினகரத் திரள்போல் ஓவி லாவிறல் வீரர்கள் இலக்கர்வந் துதித்தார். தவ (துணைவர்.11. [ஆவதெர்லல் - அப்போது, தினகரத் திரள்போல் - சூரியர் பலரின் கூட் டம் போல்.] அம்பிகை இவ்வாறு சொன்னவுடன் அந்த ஒன்பது மாதர் களுடைய உடம்பெல்லாம் நடுங்கி வியர்வைத் துளிகள் உண்டாயின. கர்ப்பம் உண்டான மங்கையர்க்கு அச்சம் எளிதில் உண்டாகும். குழந்தைகளை வயிற்றில் வைத்துள்ளதை நினைத்ததால் அவர்களுக்கு அந்த நடுக்கம் உண்டாயிற்று. அந்த வேர்வைத் துளி ஒவ்வொன்றி லிருந்தும் ஒவ்வொரு வீரராக லட்சம் பேர் வந்து குதித்து விட்டார்கள். அவர்கள் எல்லாம் ஓடிவந்து பரமேசுவரன் பாதத் தில் வணங்கினார்கள். அவர்களை நோக்கிப் பரமேசுவரன், மைந் தர்களே, நீங்கள் யாவரும் என் புதல்வனாகிய கந்தவேளுக்குப் படைவீரர்களாக விளங்கி, அவன் ஏவியதைச் செய்துகொண்டிருப் பீர்களாக!" என்று பணித்தான். மைந்தர் கேண்மினோ : நீவிர்கள் யாவரும் வயத்தால் இந்தி ராதியர் பகைவரை அடுவதற் கெமது சுந்த வேள்படை ஆகுதிர், என்னவே சுழறி, முந்து போருள் புரிந்தனன் யாவர்க்கும் முதல்வன். (துணைவர்.14.) [வயத்தால்-பலத்தினால், இந்திராதியர் பகைவரை- அசுரர்களை. படை சே.ே] சிவபெருமானுடைய பார்வை பட்டு உண்டான நவசக்திகளின் வியர்வையிலிருந்து அவர்கள் தோன்றினமையால் பரமேசுவர
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/145
Appearance