126 கந்தவேள் கதையமுதம் னுக்குப் புத்திரர்கள் ஆகிவிட்டார்கள். இதைவிட வேறு பாக்கியம் என்ன வேண்டும் ? " உங்களுடைய பலத்தினால் அசுரர் பலத்தை அழிக்கக் கந்தவேளின் படைவீரர்களாக ஆகுங்கள் என்று பணித்தான். நவவீரர்களின் தோற்றம் PF இகலும் மாமணி மகளிர்தம் கருவினுள் இறைவற் புகழும் நந்தியங் கணத்தவர் குழவியாய்ப் போத்து நிகரில் காளையர் ஆகிவீற் றிருந்தனர், நெறிசேர் சுகள்எ னும்படி பரமனை முன்னியே தொழுது. (துனைவர், 17.) (இகலும் ஒன்றோடு ஒன்று வேறுபட்ட. கருவிலுன் - கருப்பத்தில்.] நவசக்திகளுடைய கருவிலேயே பரமேசுவரனைப் புகழ்ந்து கொண்டு குழந்தையாக இருந்தவர்கள் நாளடைவில் அங்கேயே வளர்ந்து காளையாகிவிட்டார்கள். அவர்கள் நந்திதேவனைத் தலைவ னாகக்கொண்ட சிவகணங்கள். உமாதேவியின் சாபம் இருந்ததனால் அவர்களால் வெளியே வர முடியவில்லை. கர்ப்பத்திற்குள் இருந்த தனால் வேறு விதமான கவர்ச்சி இல்லை. அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு இருந்தார்கள், சுகப்பிரம்ம நிஷி போல. அங் கேயே வளர்ச்சி பெற்றிருந்தார்கள். பூமியில் பிறந்தால்தான் நம்முடைய உள்ளம் சிதைந்துபோவதற்கான நிகழ்ச்சிகள் உள்ளன. சினிமா, டிராமா என்று நம்முடைய கவனத்தை இழுப்பதற்கு எத்தனையோ பொருள்கள் உள்ளன. நவசக்திகளின் திருவயிற்றில் இருந்த அந்தப் பிள்ளைகளுக்கோ எந்த விதமான போக்கும் இல்லை. ஆகையால் மானசிகமாகத் தவம் செய்கின்ற பக்குவம் வந்து விட்டது. அந்தப் பக்குவமே அவர்கள் வெளியில் வந்த பிறகும் தொடர்ந்தது. சுகப்பிரம்மம் பிறந்தவுடன் மகாஞானியாக இருந்தார். தகப்ப னாரை விட்டு ஓடத் தொடங்கினார். பிறந்தவுடன் சுகப்பிரம்மம் ஓடினார் என்றால் அதற்கேற்றபடி அவ்வளவு காலம் வயிற்றில் வளர்ந்துவிட்டார் என்று தெரிந்து கொள்ளவேண்டும். ஓடும் அவரைப் பார்த்து மாவும், மயிலும், "சுகா, சுகா !" என்று கத்தின. வியாசரும் ஓடினார். சுகப்பிரம்மம் ஓடிக்கொண்டே இருந்தார்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/146
Appearance