உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கந்தவேள் கதையமுதம் பரிபுரந்தனில் முன்வரும் மங்கையர் பரைதன் கருணை கொண்டசொல் கேட்டலும் கவற்சியை அகன்று விரைவின் மேலவர் பதம்பணிந் தேத்தியே விடைகொண் டொருவி மைந்தரை அளித்தனர் யாவரும் ஒருசார். (துணைவர்.23) [பரிபுரம் - சிலம்பு. பரை - அம்பிகை. கவற்சி - கவலை. ஓருவி - அவ்விடத்தை நீங்கி.] அம்பிகையின் பரிவான அந்த வார்த்தையைக் கேட்டு, ஒன்பது மாதர்களும் தனி இடத்திற்குச் சென்று ஒன்பது வீரர்களைப் பெற்றார் கள். அப்படிப் பிறந்தவர்கள் வீரம் என்ற அடையை உடைய பெயர்களைப் பெற்றார்கள். நவ ரத்தினங்களில் மிகச் சிறந்தது மாணிக்கம். அதன் அதிதேவதை சூரியன். அதுதான் தலையாய மணி. அந்த மாணிக்கவல்லி வயிற்றில் வீரபாகு பிறந்தார். பேர ஆகுவை உடையவன் இளவல்பே ரருளால் தூர ஆகுலம் வானவர் பெருவகை தொலைப்பான் ஏர வாகுறும் செம்மணிப் பாவைதன் விடத்தில் வீர வாகுவந் துதித்தனன் உலகெலாம் வியப்ப. (துணைவர்.25.) (பேர ஆகுவை உடையவன் வேறிடங்களுக்குச் செல்லப் பெருச்சாளி யாகிய வாகளத்தை உடைய விநாயகர். சூர ஆகுலம் -சூரணால் உண்டாகிய துன்பம், ரரவாகு உறும் - அழகையுடைய தன்மையைப் பெற்ற.) விநாயகருடைய இளவலாகிய முருகப் பெருமான் பேரருளால், சூரனால் வந்த துன்பத்தைப் போக்க மாணிக்கவல்லி வயிற்றிலே உலகமெல்லாம் உவப்ப வீரபாகு வந்து தோன்றினார். இப்படி ஏன் சொன்னார்? வீரபாகு முருகப் பெருமான் தம்பியாகப் பிறக்கிறார். அங்கே எல்லோரும் சகோதர ஒற்றுமை உடையவர்கள். தனித் தனியாகப் பிரிகின்றவர்கள் அல்ல. அதிகமான சகோதரர்கள் இருந்தால் அதிகமான பிரிவினை உண்டாவது உலக இயல்பு. ஆண்டவன் தர்மம் இதற்கு மாறானது. சகோதரர் அதிகம் இருந் தால் உறவு அதிகமாகிறது. முருகன் தம்பி வீரபாகு என்று சொல்ல வந்தவர் அவர்கள் குடும்பம் முழுவதையும் சொல்கிறார். வீரபாகுக்கு மூத்தவன் முருகன், அவனுக்கு மூத்தவன் விநாயகர் என்று அந்தக் குடும்பத்தின் உறவை எடுத்துச் சொல்கிறார். வீரபாகு - வீரத் தோள்களை உடையவன். பாகுதோள். வீரர்களைச் சொல்லும்போது தோள்களில் வலிமை இருப்பதாகச்