உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரர்களின் தோற்றம் 129 சொல்வார்கள். முகபல பராக்கிரம் என்று சொல்வதில்லை ; புஜபல பராக்கிரம் என்றுதான் சொல்வார்கள். ஆடவர்களுக்குத் தோள் சிறப்பாக இருக்க வேண்டும். மாணிக்கவல்லியிடம் வீரபாகு தோன்றியதைப் போல, தரள வல்லியிடம் வீரகேசரியும், புஷ்பராகவல்லியிடம் வீரமகேந்திரனும், கோமேதகவல்லியிடம் வீரமகேச்சுரனும், வைடூரியவல்லியிடம் வீர புரந்தரனும், வைரவல்லியிடம் வீரராக்கதனும், மரகதவல்லியிடம் வீரமார்த்தாண்டலும், பவளவல்லியிடம் வீராந்தகனும், லெவல்லி யிடம் வீரதீரனும் திரு அவதாரம் செய்தார்கள். உதிதருமத் திறல்வீரர் அரியணைமேல் அம்மையுடன் உறைந்த நாதன் பதமலர்கள் பணிந்தெழலும் அவர்க்கண்டு கார்ப்பதியைப் பரிவால் நோக்கி, மதியுடையர், திறலுடையர், மாளஅரும் கலத்தினர், நம் மைந்தர், இன்னோர் புதியரலர், நந்திதனிக் கணத்தவரென் ருள்கருதிப் பொருளாய் நின்றான். (துணைவர். 85.) [ அரியணைமேல் சிங்காதனத்தின்மேல். மான அரும் கலத்தினர் மாகிய அரிய ஆபரணத்தை உடையவர்கள்.] - மான இந்த ஒன்பது குழந்தைகளைத் தன்முன் கண்டவுடன் அம்பிகை யின் மனத்தில் வாஞ்சை உண்டாகும் என்று எண்ணினார் சிவபெரு மான். அவர்கள் அம்மாவும் அப்பாவும் இருக்கிற அரியணைக்குச் சென்று தரிசித்தார்கள். இறைவன் அம்பிகையைப் பார்த்தான். "இந்தக் குழந்தைகள் நம் குழந்தைகள். மிகவும் அறிவாளிகள். வீரம் உடையவர்கள். மானம் உடையவர்கள். வர்கள் புதிய வர்கள் அல்லர். நந்தி கணத்தைச் சேர்ந்தவர்கள், இந்த வடிவில் வந்திருக்கிறார்கள்" என்று அம்பிகையை நோக்கித் திருவாய் மலர்ந்தருளினான். மதி, திறல், மானம் ஆகிய மூன்றையும் அவர்களு டைய இயல்புகள் என்று ஆண்டவன் சொல்கிறான். மதி இல்லாத வீரம் பயனுடையது ஆகாது. அறிவு இல்லாத வீரத்தால் கொலை தான் நிகழும். உடம்பிலுள்ள வீரத்தைவிட உள்ளத்திலுள்ள அறி வின் பலந்தான் சிறப்பு. ஆகவே சிவபெருமான் முதலில் மதி யுடையர்' என்று சொல்கிறான். 17 1