130 கந்தவேள் கதையமுதம் ஞானத்தின் பலம் இருந்தால்தான் இந்த நாட்டில் கொண் டாடுவார்கள்.ஞானம் பொருந்திய வீரம் உடையவர்கள் என்று சொன்னவன் மூன்றாவதாக, மானம் என்னும் அருங்கலம் உடைய வர்கள்' என்று சொன்னான். மானத்தையே ஆபரணமாகக் கொள் வார்கள் என்றான். அரசனை மானாபரணன் என்று சொல்வது வழக்கம். கல்வெட்டுகளில் அந்தப் பெயரைக் காணலாம். மானத்தை ஆபரணமாகக் கொண்டவன் என்று பொருள். மானம் இல்லா விட்டால் நிர்வாணமாகப் போவதுபோல நினைப்பார்கள். இப்படி எம்பெருமாட்டி உள்ளத்தில் முன்பு இருந்த கோபம் அடியோடு மாறுவதற்கு இந்தப் பிள்ளைகளைப் பற்றி எம்பெருமான் இங்கிதமாக எடுத்துரைத்தான். தன் மனைவியின் உள்ளம் குளிரும் படியாகப் பேசுவது கணவனுடைய கடமை. சிவபெருமானுக்குப் பேசவா தெரியாது? இவர்கள் எல்லாம் புதியவர்களாகத் தோன்றிய பிள்ளைகள் என்று எண்ணாதே. இவர்கள் நம் நந்தி கணத்தைச் சேர்ந்தவர்கள்" என்ற உண்மையை உரைத்தான். . தேவியும், இந்த நவ வீரர்களைப் பார்த்து அருள் செய்ய. சிவ பெருமானும் இந்த ஒன்பது வீரர்களுக்கும் ஒன்பது வாள்களைக் கொடுத்தான். " உங்களுக்கு முன்பாகத் தோன்றியுள்ள லட்சம் வீரர்களோடு முருகன் இட்ட பணியைச் செய்து வருவீர்களாக" என்று அருள் செய்ய, அவர்களும் இசைந்து பணிந் தார்கள். சேர்ந்து, தேவியது கேட்டுமைந்தர்க் கருள்புரிய அவர்க்கெல்லாம் சிவன் வெவ்வேறு தாவில்சுடர் வாளுதவி வியர்ப்பில்வரும் ஓரிலக்கத் தயை ரோடு தீவிர்களும் ஓன்றிநுங் கட்கிறையா கியசேயை நீங்கல் இன்றி ஏவல்அவன் பணித்தனசெய் தொழுகுதிரென் ரூன்அவரும் இசைந்து தாழ்ந்தார். (துணைவர்,86,) (தா இல் - கேடில்லாத, சேயை - முருகளை. தாழ்ந்தார் - பணிந்தனர்] முருகனை அழைத்து வருதல் கைலாசபதியாகிய பரமேசுவரன் அம்பிகையைப் பார்த்து, உன் குழந்தை ஈரவணத்தில் இருக்கிறான். அங்கே சென்று
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/150
Appearance