உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரர்களின் தோற்றம் அவனைப் பார்த்து இங்கே அழைத்து வரலாம், வா" சொன்னான். 131 என்று பொம்மல் உற்றிடும் நான்முகன் ஆதியோர் புந்தி விம்மல் அற்றிட முந்துநம் விழியிடைத் தோன்றிச் செம்ம லர்ப்பெருஞ் சரவணத் திருந்தநின் சேயை இம்ம லைக்கணே உய்க்குதும், வருகென இசைத்தான். (சரவணப்.3) (பொம்மல்-வருத்தம். விம்மல் - துயரடைதல். உய்க்குதும் - அழைத்து வருவோம்.] முருகப் பெருமான் சரவணத்தில் வளர்கிறான். அம்பிகை அவனுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதவள் போல இருக்கிறாள் அல்லவா? ஆதலால் அம்பிகையைச் சம்பந்தப்படுத்தி, 'நின் சேய்' என்று கூறினான் சிவபெருமான். விபீடணனைப் பார்த்து இராமன், स குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு: பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த அகன் அமர் காதல் ஐய, நின்னொடும் எழுவர் ஆனேம்: புகல் அருங் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் உந்தை" என்று சொல்கிறான். தசரதனை, உன் தந்தை என்றான். அத்தகைய சொல்லாட்சி இது. அம்மையும் அப்பனும் விடை வாகனத்தில் எழுந்தருளிச் சரவ ணத்தை அடைந்தார்கள். அங்கே முருகப் பெருமான் திருவிளை யாடல் புரிந்துகொண்டிருப்பதைக் கண்டாள் அம்பிகை. முருகப் பெருமான் கிருத்திகை மாதர் ஆறு பேர்களிடமும் ஆறு வேறு குழந்தைகளாக வெவ்வேறு வகையான திருவிளையாடலைச் செய்து கொண்டிருந்தான். அந்தக் குழந்தைகளைப் பார்த்தவுடனே அம்பிகை அருளோடு அணைத்தாள். அப்படி அணைத்தவுடன் ஆறு திருமுகங் களும், பன்னிரண்டு கரங்களும் கொண்ட ஒரு திருவுருவமாகப் பழைய உருவத்தோடு ஆகிவிட்டான் முருகன். சரவ ணந்தனில் தனது சேய் ஆறுருத் தமையும் இருக ரங்களால் அன்புடன் எடுத்தனன் புல்லித் திருமு கங்களோர் ஆறுபல் விருபுயம் சேர்ந்த உருவம் ஒன்றெனச் செய்தனள், உலகமீன் றுடையாள். [புல்லி -அணைத்து (சரவணம்,20.)