உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கந்தவேள் கதையமுதம் முன்பு தோற்றியபோது; " அருவமு முருவு மாகி” என்று சொன்னார் கச்சியப்பர். ஆறு மாமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களும் உடையவனாக எம்பெருமான் முன்பு தோற்றினான். இடையில் ஆறாகப் பிரிந்தான். மறுபடியும் உமையவள் சேர்ந்தான். இதன் தத்துவம் என்ன? ஒன்றுபடுத்தச் உலகத்தில் ஆருயிர்களுக்கு அனுக்கிரகம் பண்ணவேண்டு மென்றால் பராசக்தியின் துணையில்லாமல் ஆகாது. ஒரு பாத்தி ரத்திற்கு ஈயம் பூச வேண்டுமானால் வெறும் ஈயம் மட்டும் போதாது. பாத்திரத்தை நன்றாகச் கழுவிக் காய்ச்சி அதில் ஈயத்தை உருக்கி விட்டால் ஒட்டாது. நவாசாரம் சேர்ந்தால்தான் ஒட்டும். தனியாகச் சிவன் அருள் புரிந்தால் போதாது. சக்தியின் அருள் இணைந்திருக்க வேண்டும். அப்போதுதான் காரியம் சித்தியாகும். கருணை என்பது பராசக்தியின் உருவம். பராசக்தியின் சம்பந்தம் இல்லாவிட்டால் உலகத்தில் உயிர்களுக்குக் கருணை கிடைக்காது. பரமேசுவரன் ஞானமூர்த்தி. அம்பிகை கருணா மூர்த்தி.ஞானமும், கருணையும் இணைந்தால்தான் பயன் உண் டாகும். அம்பிகை கருணை வடிவினள் என்பதை, அருளது சக்தி யாகும் அரன்தனக்கு 35 என்று சாத்திரம் சொல்கிறது. எப்படிக் கனலிலே சூடும், தண்ணீ ரிலே குளிர்ச்சியும் இருக்கின்றனவோ அப்படியே சக்தன் ஆகிய பரமேசுவரனிடத்தில் சக்தி இருக்கிறது. அந்த அருள் இன்றேல் சிவபெருமானால் ஒன்றும் செய்ய முடியாது. "இவமெ னும்பொருளும் ஆதி சத்தியொடு சேரின் எத்தொழிலும் வல்லதாம்; அவள் பி ரிந்திடின் இயங்குதற்கும் அரிதாம்" என்று சங்கராசாரியார் பாடுவார். உலகம் தோன்றும் முன் இறைவன் சக்தியை வெளிப்படுத்தினான். துணை இருந்தால்தான் படைப்பு உண்டாகும். பெண்உரு ஒருதிறன் ஆகின்று; அவ் உருக் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் இறைவியினுடைய என்று புறநானூறு சொல்கிறது. ஒரு பாகத்தில் அம்பிகையை வைத்திருக்கிறான் இறைவன். பிரளய காலத்தில் அந்தப் பெருமாட்டியைத் தனக்குள்ளே அடக்கிக் கொள்வான்.