உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கந்தவேள் கதையமுதம் 1 சிற்றில் கட்ட, ஆண் குழந்தைகள் அந்த வீட்டைக் காலால் தட்டி அழித்துவிடுவார்கள். கட்டுவது பெண் தன்மை, அதைத் தட்டுவது ஆண் தன்மை என்பது சின்னஞ் சிறு பிராயத்திலே தோன்றிவிடு கிறது. அப்பொழுது அந்தப் பெண்கள், "எங்கள் வீட்டை அழிக்காதே" என்பார்கள். அப்படி ஆண் குழந்தையைப் பார்த்துப் பெண் குழந்தைகள் சொல்வதாக அமைந்த பருவம் சிற்றிற் பருவம். ஆண்பாற் பிள்ளைத் தமிழில் வருவது இது. திருவிடைக்கழியிலுள்ள பெண்கள், 07 'பராசந்தி வாழ்க, பராசக்திக்கு ஜே!" என்று வாழ்த்துகிறார்கள். ஏன் தெரியுமா? 44 அம்பிகை எங்களுக்குச் சிறப்பாக ஓர் உபகாரம் புரிந்திருக் கிறாள். அந்தக் காலத்தில் ஆறு குழந்தைகளாக இருந்த முருகப் பெருமானைக் கையால் அணைத்து ஒரே திருவுருவம் ஆக்கினாள். அப்படி ஆக்கியபோது அவனுக்கு ஆறு திருமுகங்களும்,பன்னி ரண்டு கண்களும், பன்னிரண்டு கைகளும் இருக்கும் படியாக வைத் தாள். நல்ல வேளையாக பன்னிரண்டு கால்களும் அப்படியே இருக்கும்படி வைக்கவில்லை. எங்களிடத்திலுள்ள பரிவினால் அப்படிச் செய்தாள்" என்று நினைக்கிறார்கள். பன்னிரண்டு காலாலும் நாங்கள் கட்டும் சிற்றில்களை அழித்தால் நாங்கள் என்ன செய்வோம்? ஆகவே நாங்கள் செய்த புண்ணியத்தால் இரண்டு காலாக ஆக்கினாள். இரண்டு கால்களே இருக்தும் கூட நீ செய் கின்ற குறும்பு எங்களால் பொறுக்க முடியவில்லையே !" என்று அந்தச் சிறுமியர்கள் முருகனை நோக்கிச் சொல்கிறார்கள். நையா நின்ற சிறுமருங்குல் நங்கை உமையாள் பரமனொடும் நறுநீர்ப் பொய்கைத் தடங்கரைவாய் நண்ணி முகம்ஆ றினுக்கேற்பக் கையா றிரண்டு செய்ததுபோல் காலா றிரண்டு செய்யாமல் கருதி இரண்டே புரிந்தனள் முற் கடையேம் செய்த நல்வினையால்; மெய்யாய் இரண்டாய் இருந்துமவை விளைக்கும் குறும்பு பொறுக்கரிதா விளைந்து தினியாம் செயல் என்னே? வீடு தோறும் விடாதார்ந்து செய்யாள் மகிழும் விடைக்கழிவாழ் செல்வா, சிற்றில் சிதையேலே சிந்தித் தவர்உள்ளுறமுதத் தெளிவே, சிற்றில் சிதையேலே.' (லையா நின்ற சிறுமருங்குல் - தளர்கின்ற சிறிய இடையை உடைய. பொய்கை. சரவணப் பொய்கை. செய்யாள் - திருமகள். சிதையேல் -அழிக்காதே.] .