வீரர்களின் தோற்றம் 137 முருகன் ஆறு முகங்களோடும், பன்னிரண்டு கைகளோடும் ஒரு திருவுருவத்தைப் பெற்றான். கிருத்திகை மாதர்களுக்காக ஆறு குழந்தைகள் ஆனான். இப்போது அம்பிகையின் திரு வருளால் ஒரே குழந்தை யானான். இனிமேல் பால் கொடுக்க வேண்டும் அல்லவா? அம்பிகைக்கு உண்ணாமுலை என்று பெயர். அம்பிகையின் தனத்தில் வாய் வைத்து யாரும் பால் அருந்துவது இல்லை. திருஞானசம்பந்தருக்குக் கிண்ணத்தில் பால் கறந்து கொடுத்தாள் என்று பெரிய புராணம் சொல்கிறது. இங்கும் முருகப் பெருமானுக்கு ஓர் அழகான மாணிக்க வள்ளத்தில் தன்னு டைய தனத்திலிருந்து பொழிந்த பாலை முருகப் பெருமானுக்கு ஊட்டினாள் அம்பிகை. ஆதி நாயகன் கருணையாய் அமலமாய்ப் பரம போத நீரதாய் இருந்ததன் கொங்கையில் மொழிபால் ஏதி லாததோர் குருமணி வள்ளமீ தேற்றுக் காதல் மாமகற்கு அன்பினால் அருத்தினான் கலூரி. சரவணப்.23.) [அமலமாய் - மலமற்றதாய். போத நீரதாய் -ஞான இயல்பை உடையதாய். ஏது - ஏதம் குற்றம். ஒரு நிறம்.] . ஆண்டவன் எல்லாம் வல்லவன், எல்லாம் அறிந்தவன் என்று நாம் கேள்விப்படுகிறோம். அவன் எவ்வளவு சக்திமானாக இருந் தாலும் அவனைப் பற்றி நாம் கவலை கொள்ளமாட்டோம்.அமெரிக் காவில் ஒரு நாளில் 600 டாலர் சம்பளம் வாங்குகிற ஒருவன் இருக் கிறான் என்றால் அதைப்பற்றி நாம் கேட்டு வியந்து பிறகு மறந்துவிடு கிறோம். ஆனால் நாம் இருக்கும் தெருவில் மூன்றாம் வீட்டில் 300 ரூபாய் சம்பளக்காரர் ஒருவர் இருக்கிறார், அவர் 25-ஆம் தேதி நமக்குக் கையில் பணம் இல்லாதபோது ஐந்து, பத்துக் கேட்டால் தருவார் என்பதை அறிந்தால், அவருக்குத் தெரிந்த நண்பர் மூலமாக அவரைப் பழக்கம் செய்துகொள்ள விரும்புவோம். காரணம் என்ன? அவராலே நமக்கு ஓர் உபகாரம் ஆகும் என்ற எண்ணந்தான். அதுபோல் பரமேசுவரன் அகடிதகடனா சாமர்த் தியம் உள்ளவன் என்றால் அதைக் கேட்டு நாம் வியப்பு அடை வோம். அவ்வளவுதான். ஆனால் அவனிடமிருந்து நாம் பெறக் கூடிய பொருள் ஒன்று இருக்கிறது என்று சொன்னால் அவனை நாட வேண்டுமென்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது. அவனிடத்தில் 18
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/157
Appearance