உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கந்தவேள் கதையமுதம் அத்தகைய பொருள் ஒன்று இருக்கிறது. அதுதான் கருணை. அவன் கருணை நிரம்பியவனாக, வள்ளலாக இருப்பதனால் நாம் நன்மை பெறலாம், நம் குறைகளை நிரப்பிக்கொள்ளலாம் என்று எண்ணுகி றோம். அவன் கருணாமூர்த்தி என்பதை அறிந்து, அவனிடம் பக்தி பண்ணுகிறோம். அம்பிகை முருகனுக்கு ஊட்டிய பால் கருணைமயமானது. அது மலத்தைச் சேராமல் தடுக்கச் செய்வது; பரம ஞானமாக விளங்குவது. ஞானத்தில் இரண்டு வகை உண்டு; பரஞானம், அபரஞானம் என்பவை அவை. இறைவனை அறிந்து அவனோடு ஒன்றுபடுவதற் குரிய அறிவு எதுவோ அதுவே பரஞானம். மற்றவை எல்லாம் அபர ஞானம். வாலறிவு பரஞானம் ; நூலறிவு அபர ஞானம். இங்கே அம்பிகையின் பாலாக இருப்பது பரஞானம். பரம போதம் என்று கச்சியப்ப சிவாசாரியார் சொல்கிறார். ஞான சொரூபியாக விளங்குகின்ற முருகப்பெருமானுக்குப் பின் கருணை யும் ஞானமும் நிரம்புவதற்காக அம்பிகை தன் பாலை ஊட்டினாள். இறைவனிடம் குழந்தையைக் கொடுத்தாள் இறைவி. பரமேசு வரன் அவனை வாங்கிக் கொண்டான். தனக்கும் அம்பிகைக்கும் இடையே அவனை அமர்த்தினான். இவ்வாறு பரமேசுவரனும் அம்பிகையும் வீற்றிருக்க, இடையிலே கந்தன் இருக்கிறபோது மூவரையும் சேர்த்து ஒரு மூர்த்தியாக எண்ணுவார்கள்; சோமாஸ் கந்த மூர்த்தி என்று சொல்வார்கள். உமையுடனும் ஸ்கந்த னுடனும் கூடியவன் என்று பொருள். சிவபெருமானுக்குப் பல வகையான திருவுருவங்கள் இருந் தாலும் முக்கியமானவை 25 உருவங்கள் என்று சிவபுராணம் கூறும். அதில் முதலாக இருப்பது லிங்கோத்பவ மூர்த்தி. சோமாஸ்கந்தர் ஒரு மூர்த்தி. அந்தக் கோலத்தை மூன்று மூர்த்திகளாக எண்ணக் கூடாது. ஆணும் பெண்ணும் இணைந்த அர்த்தநாரீசுவர வடிவில் இறைவன் ஒருவனாகவே இருப்பான். அது ஒரே மூர்த்திதான். அது போலவே சோமாஸ்கந்தன் மூன்று உருவங்கள் சேர்ந்த ஒரே மூர்த்தி. சோமாஸ்கந்த மூர்த்திக்கு ஓர் உவமை சொல்கிறார் கச்சியப்பர் பகலுக்கும், இரவுக்கும் நடுவில் சந்தியாகாலம் இருக்கிறது. இந்தச்