வீரர்களின் தோற்றம் 139 சந்தியாகாலம் மிகக் குறுகிய அளவு உடையது. சிறிது காலந் தான் இருக்கும். எப்போதுமே சந்தியாகாலம் இருந்தால் எப்படியோ அப்படி முருகன் இருக்கிறான்; பகல் போன்ற சிவனுக்கும் இரவு போன்ற அம்பிகைக்கும் நடுவே இருக்கிறான். சந்தியாகாலத்தில் பகலின் தன்மையும், இரவின் தன்மையும் இருக் தம்; பகலின் வெளிச்சமும், இரவீன் குளிர்ச்சியும் ஒன்றுபட்டு இருக்கும். அவ்வாறே முருகப் பெருமானிடத்தில் சிவபெருமானின் ஞானமும்,அம்பிகையின் அருளும் கலந்து இருக்கின்றன. ஏல வார்குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும் பால னாகிய குமரவேள் நடுவுறும் பான்மை, ஞால மேலுறும் இரவொடு பசுலுக்கும் நடுவாய் மாலை யானதொன் றழிவின்றி வைகுமா றெக்கும். (ஏலம் - மயிர்ச்சார்ந்து] (சரவணப்.28.) மனைவி சிவபெருமானின் ஐந்து முகங்களும், அம்பிகையின் ஒரு முகமும் சேர்ந்து ஆறுமுகங்கள் ஆயின. சோமாஸ்கந்த மூர்த்தி தான் எல்லோருக்கும் மிகுதியாகக் கருணை புரிவான். மக்களோடு வாழ்கிறவர்களுக்குத்தான் மற்றக் குடும்பங்களிடத்தில் பரிவு உண்டாகும். அதுபோலத் தானும் மகனுடனும், மனைவி யுடனும் இருக்கும் கோலத்தில் சோமாஸ்கந்த மூர்த்தியாகி அருளை வழங்குகிறான் சிவபெருமான். சிவபெருமான் தனியாக இருக்கும்போது அருள் அடங்கி நிற்கும்; ஞானம் ஓங்கி நிற்கும். உமாதேவியோடு வந்த பிறகு அருள் பொங்கிவரும்; முருகனோடு சேர்ந்தபோது அது வெள்ள மாகப் பாயும். சிவபெருமான் கோவிலில் பல விழாக்கள் உண்டு. ஒவ்வொரு விழாவிலும் ஒவ்வொரு வகையான மூர்த்தி எழுந்தருளுவார். எல்லா விழாக்களுக்கும் மேலான திருவிழா தேர்த் திருவிழா அதையே பிரம்மோற்சவம் என்று சொல்வார்கள். தேர்த் திரு விழாவை ஜனநாயக விழா என்று சொல்ல வேண்டும். கோவிலுக் குள்ளே போக முடியாதவர்களும் திருத்தேரை இழுத்து அந்த விழாவில் பங்குகொள்ள முடியும். முன் காலத்தில் சில சாதியார் களைக் கோவிலுக்குள் விடமாட்டார்கள். என்றாலும் தேர்த் திரு
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/159
Appearance