உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரர்களின் தோற்றம் 141 காலில் தழையத் தழைய வேட்டி கட்டியிருந்தார்கள். அப்போது நாரதர் அங்கே வந்தார். அவருக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. மெல்ல மெல்ல அவர்களுக்கு அருகில்போய், " எங்கே, இங்கே வந்து இப்படி நிற்கிறீர்களே?" என்று கேட்டார். "இங்கே, எம்பெரு இங்கே,எம்பெரு மானுடைய திரு ஓலக்கத்தைக் காணவேண்டுமென்ற ஆசையோடு நிற்கிறோம். பூமியில்தானே அவருடைய செல்லப் பிள்ளைகள் இருக் கிறார்கள்? ஆகையால் இங்குத் தரிசிக்க வேண்டுமென்று வந்திருக் கிறோம்" என்று சொன்னார்கள். நாரதர்," இங்கே சுவாமியைத் தரிசித்து, பிறகு அம்பிகையைத் தரிசித்து, எப்போது ஊருக்குப் போவீர்கள்? நான் சுருக்கமான வழியைச் சொல்கிறேன்" என்றார். 45 4 என்ன வழி?" என்று அவர்கள் கேட்டார்கள். வேறு ஒரு சந்நிதியைச் சொல்கிறேன். அங்கே போய் நீங்கள் தரிசித்தால் அம்மைக்கும், அப்பனுக்கும் மிகவும் சந்தோஷம் உண்டாகும். இந்த இரண்டு பேருக்கும் மிகவும் பிரியமான தெய்வம் அவன். அவன்தான் முத்துக்குமாரசுவாமி" என்று சொன்னார். இப்படிக் கற்பனை செய்யும்படியாகக் குமரகுருபரர் பாடுகிறார். " மீனேறு குண்டகழி தீவாய் எடுத்ததனி வில்வியார் இளவலோடும் விதிமுறை வணங்கச் சடாயுபுரியிற்கருணை வெள்ளமென வீற்றிருக்கும் ஆனே றுயர்த்திட்ட ஐயர்க்கும் அம்மைக்கும் அருமருந் தாகிநின்ற ஆதிப் பிரானென்று மும்முதற் கடவுளும் அடித்தொழும் பாற்ற." (குண்டு அகழி -ஆழமான கடல், தனி வில்லியார் - ஒப்பற்ற வில்லையுடைய இராமபிரான். இளவல் - இலக்குவன். சடாயுபுரி - வைத்தீசுவரன் கோவில். ஆனேறு - இடபக் கொடி. மும் முதற் கடவுள் - பிரம விஷ்ணு ருத்திரர்கள்.] அம்மையின் தன்மையும், அப்பனின் தன்மையும் இணைந்த முருகப் பெருமானை வழிபட்டால் இருவருடைய பேரருளும் உண்டாகும் என்பதை அவன் சந்தியாகாலம்போல இருந்தான் என்ற உவமை குறிப்பாகக் காட்டுகிறது. இப்படி மூவரும் அமர்ந்திருந்தபோது கார்த்திகை மாதர்கள் அங்கே வந்து எம்பெருமானை வணங்கினார்கள். அவர்களுக்கு,