உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கந்தவேள் கதையமுதம் "கார்த்திகை நட்சத்திரத்திலே விரதம் இருந்து முருகனை வழி படுகிறவர்களுக்குச் சிறப்பு உண்டாகும்" என்று ஆண்டவன் அருள் செய்தான். கந்தன்றனை நீர்போற்றிய கடனால்இவன் உங்கள் மைந்தன்எனும் பெயராகுக ! மகிழ்வால்ளவ ரேனும் நுந்தம்பக லிடை இன்னவன் நோன்தாள்வழி படுவோர் தந்தம்குறை முடித்தேபரந் தனைநல்குவம் என்றான். (சரவணப்.30.) போற்றிய - பால் கொடுத்துப் பாதுகாத்த. கடனால் செயலால். நுந்தம் பகல் கிருத்திகை. நோன் தாள் - வலிமையுடைய பாதத்தை. பரந்தனை - முத்தியை.] "உங்கள் பெயரால் அவனுக்குக் கார்த்திகேயன் என்ற நாமமும் உண்டாகும்" என்று அருள் செய்தான். கிருத்திகை நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லா விதமான நலன்களையும் பெறுவார்கள்; அழிவில்லா வீட்டையும் பெறுவார்கள். முருகப் பெருமான் திரு அவதாரம் செய்த திருநாள் விசாகம். அதற்கு இல்லாத சிறப்புக் கார்த்திகைக்கு உண்டாயிற்று. சென்னைப் பக்கத்தில் மிகுதியாகக் கார்த்திகை விரதம் இருப் பார்கள். முருகப் பெருமானுடைய நன்றி உணர்ச்சி இதில் நன்றாகத் தெரிகிறது. தான் திரு அவதாரம் பண்ணின நட்சத்திரம் விசரகம் ஆக இருந்தாலும் அதற்கு இல்லாத சிறப்பு, தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரத்திற்குக் கொடுத்தான். நாம் நன்றி உணர்ச்சியோடு வாழவேண்டுமென்பதை இந்தச் செயலால் ஆண்டவன் காட்டினான். பராசர முனிவருடைய சிறுவர்கள் ஆறு பேர் அந்தச் சரவணப் பொய்கையில் மீன்களாக இருந்தார்கள். ஒரு சாபத்தினால் அப்படி ஆனார்கள். ஒரு காலத்தில் அந்த ஆறு பேர்களும் சரவணப் பொய்கையின் கரையில் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அப்போது குளத்தில் இருந்த மீன்களைப் பிடித்துக் கரைகளில் போட்டுச் சாவ அடித்து விளையாடினார்கள். பராசரர் சந்தியாவந்த னம் செய்ய அங்கே வந்தபோது தம் மக்கள் செய்வதைக் கண்டார். "அகிம்சையைக் கடைப்பிடித்து வாழவேண்டிய நீங்கள் இப்படி உயிர்களைக் கொலை செய்தீர்களே! நீங்கள் மீன்களாகப் போக என்று சாபமிட்டார். அவர்கள் அவரை வணங்கி, பிழையைப்