150 கந்தவேள் கதையமுதம் " யிற்று. ஒரு சிற்ப ஆசாரியை அழைத்து, " ஐயா ! ஆண்டவனுக்கு ஒரு பெரிய தேரைச் செய்ய வேண்டும். அந்தத் தேரில் முருகப் பெருமானின் திருவிளையாடல்களைக் குறிக்கின்ற சிற்பங்களை அமைக்க வேண்டும்" என்று சொன்னார். அந்தச் சிற்ப ஆசாரி அவரைப் பார்த்துச் சொன்னார்; "ஐயா! உங்கள் விருப்பப்படியே செய்யலாம். தேக்கு மரத்தைக் காட்டி லும் வைரம் பாய்ந்த கருங்காலி மரம் கிடைத்தால், நீங்கள் சொல் கிற சிற்பங்களை எல்லாம் கோவில்களிலுள்ள விக்கிரகங்கள் மாதிரியே செய்துவிட முடியும். சிறிதளவு எண்ணெய் பூசிவிட் டால் அசல் கோவில் விக்கிரகங்களேயாக இருக்கும்" என்றார். ரதத்தி லுள்ள சிற்பங்களைப் பண்ணக் கருங்காலி மரம் எங்கே கிடைக்கும் என்று பார்க்கலானார்கள். $$ ஒருநாள் அந்தச் சிற்ப ஆசாரி, காட்டு வாரிய அதிகாரியாக இருந்தவரின் வீட்டு வழியாகப் போனார். அவருடைய பையன் யானையுடன் விளையாடிக்கொண்டிருந்தான். அந்த யானையைப் பார்த்தவுடன், அதன் அருகில் போய் நல்ல கருங்காலி மரமா என்று தட்டிப் பார்த்தார், மோந்து பார்த்தார். ஆகா! அருமையான வைரம் பாய்ந்த கருங்காலி மரம் " என்று அதைத் தட்டிப் பார்த்த வுடன் சொன்னார். பக்கத்தில் இருந்த குழந்தை அதைக் கேட்டு, "இல்லை, இது என்னுடைய யானை" என்றது. விளையாட்டுத் தன்மை உடைய அந்த குழைந்தைக்கு அது யானையாகவே தோன்றி யது; மரமாகத் தோன்றவில்லை. இதைத் திருமூலர் சொல்கிறார். "மரத்தை மறைத்தது மாமத யானை. சிறு பிள்ளைக்குத் தான் விளையாடுகிற பொம்மையாகிய யானை என்கிற எண்ணமே தவிர, மூலப்பொருளான மரம் தெரியவில்லை. யானை விவகாரம் மரத்தை மறைத்துவிட்டது. அந்தச் சிற்பிக்கோ அந்த மூலப்பொருளில் நினைவு ஓடியதால், இது விளையாடுகிற யானை என்பது மறந்துபோயிற்று. யானை மரத்தை மறைத்தது. மரம் என்று பார்க்கும்போது யானை மறைந்துவிட்டது. அதுபோல மெய்ஞ்ஞானிகள் இந்த உலகத்தைப் பார்ப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் இறைவன் வடிவமாகத் தோன்றும். நமக்குப் பஞ்ச பூதங்களாகத் தோன்றுகின்றன. பஞ்ச பூதங்கள் பரத்தை
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/170
Appearance