உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரர்களின் தோற்றம் மறைத்துவிட்டன. அவர்களுக்குப் பரத்திலுள் எல்லாம் மறைந்து போய்விடுகின்றன. இதைத்தான் திருமூலர் அழகாகச் சொல்கிறார். மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை; பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்; பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம். 64 இந்திராதி தேவர்கள் இதுவரைக்கும் இறைவனுடைய அருளைப் பெறாமல் அவர்களுடைய இயல்பான கண்ணால் எல்லாவற்றையும் அறியும்போது அவரவர்களுடைய விருப்பு வெறுப்புக்கு ஏற்பப் பார்த்தார்கள். இறைவனுடைய திருவருளால் அறிவில் தெளிவு பிறந்த பிறகு எல்லாம் அவன் மயமாகவே கண்டார்கள். இதைச் சொல்கிறார் ஆசிரியர். ஆறிகிலம் இந்நாள் கரறும் அகிலமும் நீயே பாகி உறைதரு தன்மை; நீவந்து உணர்த்தலின் உணர்ந்தாய் அன்றே ; பிறவொரு பொருளும் காணேம்; பெருமநின் வடிவ மன்றிச் சிறியம்யாம் உனது தோற்றம் தெரிந்திட வல்ல மோதான்? (திருவிளையாட்டுப். 95) இந்தப் பெரிய வடிவத்தை எங்களால் கண்டு தெரிந்து கொள்ள முடியாது. ஆதலின் பழைய வடிவோடு இருந்தருள வேண்டும்" என்று அவர்கள் வேண்டினார்கள். அப்படியே எம்பெரு மான் தொன்றுள் வடிவத்தோடு தோன்றினான். பிறகு அவர்கள் முருகனைப் பார்த்து, எம்பெருமானே,சூரன் முதலியவர்கள் எங்களுக்குத் துன்பம் தருகிறார்கள். அவர்களை அழித்து, நாங்கள் உன்னுடைய ஏவல் செய்யும்படி எங்கள் அரசை நியே ஆட்சி செய்து இருப்பாயாக" என்று சொன்னார்கள். 56 குழந்தை தன் அதைக் கேட்டு ஆண்டவன் நகைத்தான். மேசையைக் காட்டி, "அப்பா, நீ இதை வைத்துக்கொள்' என்று சொன்னால் தந்தை எப்படி மகிழ்வானோ அதேபோல இறைவன் மகிழ்ந்தான். குழந்தைத் தன்மையை உணர்ந்தான். நகைப்பது போல் நகைத்தாலும் இந்திரனது அன்பை உணர்ந்தான்; அறியாமையையும் உணர்ந்தான். "நீ எனக்கு அளித்த நாட்டை உனக்கே தருகிறேன். நான் தேவசேனாபதியாக இருந்து அசுரர்