152 கந்தவேள் கதையமுதம் களுடைய கொட்டத்தை எல்லாம் அடக்குகிறேன். நீ சற்றும் கவலை அடையாதே" என்று அனுக்கிரகம் பண்ணினான். முருகன் திருவிளையாடல் செய்யும்போது எவற்றை எல்லாம் வெவ்வேறு இடங்களில் மாற்றி வைத்தானோ அவற்றை கால்லாம் இந்திரன் விண்ணப்பித்துக்கொண்டபடி மீண்டும் வழக்கப்படி இருக்கும்படி செய்தான். பிறகு, இந்திரன் மயனைக் கொண்டு பெரிய மணிமண்டபம் அமைத்து முருகனை அங்கே வீற்றிருக்கச் செய்து, ஆராதனை செய்தான். முருகனிடம் விடை பெற்றுக்கொண்டு தேவர்கள் யாவரும் தம் தம் இடங்களை அடைந்தார்கள். முருகப் பெருமான் இருந்த இடத்தில் இமயவர்கள் பூசை செய்து வணங்கினமையினால் இமாசலத்திலுள்ள அந்தப் பகுதியை, கந்தகிரி என்று யாவரும் சொல்லத் தொடங்கினார்கள். அங்கே சில நாள் முருகன் எழுந்தருளியிருந்தான். முருகன் ஆட்டு வாகனம் பெற்றது உலகம் நன்மைபெற வேண்டி நாரதர் ஒரு யாகம் செய்தார். அதில் ஓர் ஆடு எழுந்தது. எல்லோரையும் தொலைக்கிற பயங்கர மான ஆற்றலுடன் அது வந்தது. அதைக் கண்டு தேவர்கள் நடுங்கி னார்கள் ; முருகப் பெருமானிடம் வந்து முறையீட்டார்கள். அப்போது முருகன் வீரவாகுவை நோக்கி, "அந்த ஆட்டைக் கொணர்க' என்று ஏவ, அவரும் அங்கே சென்று, ஆட்டின் இரு கொம்புகளையும் பிடித்து இழுத்துக் கொண்டுவந்து எம்பெருமானிடம் விட்டனர். ஆடலந் தொழில்மேல் கொண்டே அனைவரும் இரியச் செல்லும் மேடமஞ் சுறவே ஆர்த்து விரைந்துபோய் வீர வாகு கோடவை பற்றி ஈர்த்துக் கொண்டுராய்க் கயிலை நண்ணி ஏடுறு நீபத் தண்டார் இளையவன் முன்னர் உய்த்தான். (தகரேறு. 21.) ( ஆடலந்தொழில் - சண்டை செய்யும் செயலை. இரிய - பயந்து ஓட.மேடம் ஆடு. கோடு - கொம்பு- ஈர்த்து - இழுத்து. கடம்பமாலை.) உராய் - உலரவி, நீபத்தண்டார் அதன்பின் நாரத முனிவர் தம் வேள்வியை நிறைவேற்றினார். வீரவாகு தேவர் கொண்டுவந்த ஆட்டின்மேல் ஆண்டவன் ஏறி அமர்ந்தான். அது முதல் முருகப் பெருமானுக்கு உகந்த வாகனங் களில் அதுவும் ஒன்று ஆயிற்று.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/172
Appearance