உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமர குருபரன் மிகைத்த கண்களை விழித்தளன் 155 என்கிறார். எல்லோருக்கும் இரண்டு கண்கள். இவனுக்கோ எட்டுக் கண்கள். பிரமன் எட்டுக் கண்களாலும் விழித்தான்; வெட்கமுற்றான். இரண்டு கண்களைக் கொண்டவர்கள் விழிப்பதைக் காட்டிலும், எட்டுக் கண்களைக் கொண்டவன் விழிப்பது பலருக்கும் தெரியும். முன்பே அகந்தையினால் அவன் அறிவு மறைந்திருந்தான். இப்போது அச்சம் வந்தது. வார்த்தைகள் எழவில்லை. கோழி சாஸ்திரி இங்கே எனக்கு எங்கள் ஆசிரியப் பிரான் சொன்ன ஒரு வரலாறு நினைவுக்கு வருகிறது. உடையார் பாளையத்தில் ஒரு ஜமீன் தார் இருந்தார். அவருக்கு யுவரங்கர் என்று பெயர். தமிழ், வட மொழி, இசை முதலியவற்றை நன்றாக அறிந்தவர். அவற்றில் வல்லவர்களைப் பாராட்டி, அவர்கள் கூறுவதைக் கேட்டு நன்றாக ரசிப்பவர். அவரிடத்தில் அனந்தகிருஷ்ண சாஸ்திரியார் என்ற வடமொழி வித்துவான் இருந்தார். யுவரங்கரின் பாராட்டைப் பெறுவதற்காகப் பல வித்துவான்கள் அங்கே வருவார்கள். சங்கீத வித்துவான்கள் வந்து பாடுவார்கள். தமிழ்ப் புலவர்கள், வடமொழி வித்துவான்கள் வந்து தாம் இயற்றியுள்ள பாடல்களைச் சொல்வார்கள். யுவரங்கர் கொடுப்பது சிறிய பரிசாக இருந்தாலும், சுவை அறிந்து கொடுப்பார். ஆகையால் அதைப் பெரிதாக எண்ணி மதித்துப் போவார்கள். கவிஞர். அனந்தகிருஷ்ண சாஸ்திரியார் மிகப் பெரிய வித்துவான்; வெளி ஊரிலிருந்து வருகிற புலவர்கள் அவரைப் பார்த்து, இந்தக் காட்டில் இருக்கிறீர்களே! எங்கள் மைசூருக்கு வந்தால் எங்கள் அரசர் உங்களைப் பட்டுப் பீதாம்பரத்தால் அலங் கரிப்பார்" என்று சொல்வார்கள். அவர், காட்டில்தான் சிங்கம் இருக்கும். எங்கள் அரசர் சிங்கத்தைப் போன்றவர். என்னதான் உங்கள் அரசர் எனக்குப் பீதாம்பரம் போர்த்தினாலும், எங்கள் அரசர் சொல்வதன் சுவை அறிந்து, தலையை அசைத்து ரசிக்கிறாரே, அதற்குச் அதற்குச் சமான மாகுமா?" என்று கேட்பார்.