உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கந்தவேள் கதையமுதம் கலைஞர்கள் தாம் பெறும் பரிசைப் பெரிதாக எண்ணுவதில்லை. நன்றாக ரசிப்பவர்களையே மதிப்பார்கள். எங்கே ரசிக்க வேண் டுமோ அங்கே ரசித்தால்தான், உண்மையான கலைச்சுவை தெரிந்த வர்கள் என்று கலைஞர்கள் மகிழ்வார்கள். அனந்தகிருஷ்ண சாஸ்திரியாரின் குருநாதர் கோழி மங்கலம் என்ற ஊரில் இருந்த ராமா சாஸ்திரிகள். அனந்தகிருஷ்ண சாஸ்திரியாருக்குத் தம் குருநாதரை அழைத்து வந்து, யுவரங்கரிடம் அறிமுகப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. சாஸ்திரியார் அதை விரும்பவில்லை. சில முறை சொல்லிப்பார்த்தார். "எனக்கு அங்கே என்னடா வேலை?" என்று சொல்லி விட்டார். ராமா "அவர் மிகவும் ரசிகர். உங்களிடத்தில் மிக மரியாதையாக இருப்பார். நீங்கள் சும்மா வந்துவிட்டுத் திரும்பிவிடலாம்" என்று இவர் வற்புறுத்தினார். இந்தத் தொந்தரவு பொறுக்காமல் அவரும் இவருடைய வேண்டுகோளுக் கிணங்கி உடையார்பாளையம் போனார். கையில் ஏதேனும் காணிக்கை கொண்டுபோகவேண்டு மென்ற எண்ணத் தில் ஒரு தேங்காயை வாங்கிக் கொண்டு போனார். அங்கே ஜமீன்தார் அமர்ந்திருக்க, பக்கத்தில் பெரிய மீசை யுடன் சிலர் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார்கள். இத்தகைய காட்சியை ராமா சாஸ்திரிகள் அதற்குமுன் எங்கும் பார்த்தது இல்லை, அவருக்குக் கொஞ்சம் நடுக்கம் உண்டாயிற்று. அப்போது யுவரங்கர், "தாங்கள் யார்?" என்று கேட்டார். உள்ளே இருக்கிற நடுக்கத்தினாலே அவர் வாய் குழறிற்று. "கோழி மங்கலம் ராமா சாஸ்திரிகள்" என்று சொல்வதற்குப் பதிலாக வாய் குழறி, "ராமா மங்கலம் கோழி சாஸ்திரிகள் !" என்று சொல்லிவிட்டார்! அவர் நீட்டிய தேங்காய் கை நடுக்கத் தில், கீழே விழுந்து உடைந்துவிட்டது. அதன் பிறகே தெளிவு "உங்களை பெற்றார். நிமிர்ந்து நின்று உடையாரிடம் சொன்னார். உடையார் என்று சொன்னார்கள். தேங்காய் உடைந்துவிட்டதே " என்றார். உடையார்பாளையம் ஜமீன்தார்கள் காலாட்கள் தொழ