162 கந்தவேன் கதையமுதம் பெருமான், நம்மாழ்வார் போன்றவர்களும் அப்படித்தான் சொல்லி இருப்பார்கள்.அவர்களை எல்லாம் முட்டாளாக்கி, நான் மட்டும் அறிவுக்குஞ்சாக எனக்கு விருப்பம் இல்லை. எண்ணிப் பார்த்தேன். பின்பு உண்மை புலனாயிற்று. ஒருவர் வீடு கட்டத் தொடங்குகிறார். பணம் இல்லாமையினால் கீழ்த்தளத்தோடு வேலை நின்றுவிட்டது. அதை ஒருவர் பார்த்தார். பின் அடுத்த வருஷம் பார்க்கும்போது அந்தக் கட்டிடம் கட்டி முடிக் கப்பட்டிருந்தது. அதைக் கண்ட நண்பர் அந்த வீட்டுக்காரரிடம், "கட்டிடம் கட்டிவிட்டீர்கள் போலிருக்கிறதே !" என்கிறார். அதற்கு அவர், "கட்டிவிட்டேன்" என்று சொல்லமாட்டார்; "கட்டிடம் கட்டியாச்சு" என்று சொல்வார். அப்படியே தம் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணினவரைப் பார்த்துக் கேட்டால், "கல்யாணம் செய்தேன் " என்று சொல்ல மாட்டார்; கல்யாணம் ஆச்சு" என்று சொல்வார். இப்படி, நான் செய்தேன் என்று சொல்லாமல் வேறு வகையில் சொல்கிற பழக்கம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. நல்லதானாலும், பொல்லாததானாலும் எல்லாம் ஆண்டன் செயல் என்பதை எண்ணி அப்படிச் சொல்லப் பழகிக்கொண்டிருக்கிறோம். நல்லதானாலும் அப்படியே சொல்வோம்; கெட்டதானாலும் கூட, எல்லாம் இறை வன் செயல் என்ற எண்ணத்தோடு பேசுவோம். நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானே இதற்கு நாயகமே" என்று மாணிக்கவாசகர் பாடுவார். அகங்காரம் உண்டாகாமல் இருப்பதற்காக,நான் என்று சொல்லாமல் பேசுவதற்காக, அமைந்த பழக்கம் இது. நான் என்ற எண்ணம் இருக்கும் வரைக்கும் இறைவன் அருள் கிடைக்காது. நாம் சமையல் பண்ணுகிற பண்டங்களில் கூட இதனைத் தெரிந்துகொள்ளலாம். ராத்திரியில் ஒருவன் தன் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டு கிறான். யார் என்று உள்ளே இருக்கிறவர்கள் கேட்கிறார்கள். அவன் தன் பெயரைச் சொல்லாமல் நான் என்று சொல்கிறான். மறுபடியும் தட்ட, உள்ளே உள்வர்கள் மறுபடியும் கேட்க, அப்போதும் அவன், "நான்தான்" என்று சொல்கிறான். நான்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/182
Appearance