குமர குருபரன் 163 என்பது போதாது என்று தான் என்பதையும் சேர்த்துச் சொல் கிறான். நம்முடைய சமையலில் குழம்பு, ரசம் என்று வேறு வேறாக இருக்கின்றன.குழம்பில் தான் இருக்கும். ரசத்தில் தான் இல்லை. அதுபோலத் தான் என்ற அகந்தை இருந்தால் அவர்களுக்கு எல்லாம் குழம்பும்; இல்லையானால் ரசம்போலத் தெளிவாக இருக்கும். நான் என்று சொல்வதற்கு உரியவன் ஒருவன்தான். யார் எல்லாச் செயல்களையும் செய்கிறானோ அவன்தான் நான் என்று மார்தட்டுவதற் குரியவன். இரணியனைப்போல நான் என்ற அகங் காரத்தோடு இருப்பவன் கடைசியில் அழிந்து போவான். இறைவன் ஒருவன் தான் நான் என்று மார்தட்டுவதற்குரியவன், அருணகிரியார், நான் என்று மார்தட்டும் பெருமாளே" 04 என்று திருப்புகழில் பாடுகிறார். முருகன் அயனைச் சிறையிடுதல் முருகப் பெருமான் நான்முகனைப் பார்த்து, "வேதத்தில் முதல் எழுத்திற்கே உனக்குப் பொருள் தெரியவில்லை. வேதம் முழுவதும் தெரியும் என்று அகந்தையோடு இருக்கிறாய். தகுதி இல்லாமல் உத்தியோகம் எப்படிப் பண்ணுகிறாய் ?" என்று கேட்டான். பெரிய கணக்குகளைப் பார்க்கும் அதிகாரிக்கு, நாலும் நாலும் எட்டு என்று கூட்டத் தெரியாவிட்டால், அவனை உத்தியோகத்தில் வைத்துக் கொள்ளலாமா? உலகத்தை எல்லாம் படைக்கும் ஒரு பெரியவன் இப்படித் தகுதி இல்லாமல் இருக்கலாமா? அதனை எண்ணும்போது முருகனுக்குக் கோபம் வந்தது. பிரமனுடைய நான்கு தலைகளும் குலுங்கும் வண்ணம் தன்னுடைய பன்னிரண்டு கைகளாலும் குட்டினான். எட்டொ ணாதஅக் குடிலையின் பயன்இணைத் தென்றே கூட்டு ரைத்திலன் மயங்கலும், இதன்பொருள் கருதாய்; சிட்டி செய்வதித் தன்மைய தோஎனாச் செவ்வேள் குட்டி னான்அயன் நான்குமா முடிகளும் குலுங்க. (அயனைச் சிறைபுரி-14) (குடிலை-பிரணலம். கட்டுரைத்திலன் - சொல்லவில்லை.]
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/183
Appearance