குமர குருபரன் 171 நாதன் இத் தன்மை கூறி நல்லருள் புரித லோடும் போதினன் ஐயஉன்றன் புதல்வன்ஆற் றியஇத் தண்டம் ஏதமன் றுணர்வு நல்கி யாடுனனும் அகந்தை வீட்டித் தீதுசெய் வினைகள் மாற்றிச் செய்தது புனித மென்றான். (அயனைச் சிறை நீக்கு.34.} (போதினன் - பிரமதேவன், தண்டம் - தண்டனை. ஏதம் அன்று - துன்பம் அன்று.) 'இந்தப் பையன் அக்கிரமம் பண்ணினான். உங்கள் பிள்ளை ஆயிற்றே என்று பார்த்தேன். இல்லாவிட்டால் என்ன பண்ணி யிருப்பேன் தெரியும்?" என்று இந்தக் காலத்தில் சொல்வார்கள். பிரமன் அப்படிச் சொல்லவில்லை. என்ன இருந்தாலும் இறைவன் திருவருளால் படைப்புத் தொழில் பண்ணுகிறவன் அல்லவா ? முதலில் சிறிது அகந்தை இருந்தாலும் சிறையில் வாடிய பிறகு, புடம்போட்ட பொன்போல ஆகிவிட்டான். இறைவன் செய்கிற காரியங்கள் எல்லாம் நமக்குச் செய்கின்ற நன்மை என்று எண்ண வேண்டும். பிரமனது அகங்காரம் போய்விட்டது. முருகப் பெருமான் செய்த காரியம், "புனிதம் என்கிறான். புனிதம் என்றால் தூய்மை என்று பொருள். அழகான ஆடையைச் சலவை செய்தது போல, எம்பெருமான் என்னைச் சலவை செய்துவிட்டான் " என்பது போலப் பேசினான். $$ 46 பெரியோர் இயல்பு ஆண்டவனுடைய அன்பர்கள் தங்களுக்குத் துன்பம் வந்தால், இறைவன் துன்பத்தைத் தந்தானே !" என்று வருந்தமாட்டார்கள். நம்மைப் போன்றவர்கள், "ஆண்டவனுக்குக் கண் இல்லை.நான் எவ்வளவு பூசை பண்ணுகிறேன்! எனக்குத் துன்பத்தைத் தந்து விட்டானே!" என்று கூக்குரல் இடுவோம். உண்மையான அன்பர் கள் தமக்கு வரும் துன்பங்களை இறைவன் தந்த பிரசாதமாக எண்ணுவார்கள். கஞ்சனூரில் ஹரதத்த சிவாசாரியார் என்ற பெரியவர் இருந் தார். ஒரு நாள் திருக்கோவிலுக்குச் சென்றார். அவருடைய சீடர் களும் அவரோடு போனார்கள். அக்கினிபுரீசுவரர் என்ற திருநாமம் உடையவர் அங்கே எழுந்தருளியிருக்கும் பெருமான். அப்போது தர்மகர்த்தா கோவில் தாசியை ஒரு கம்பத்தில் வைத்துக் கட்டி அடித்துக் கொண்டிருந்தார். சிவாசாரியார் அந்தத் தர்மகர்த்தா
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/191
Appearance