உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 கந்தவேள் கதையமுதம் விடம்,"அவளை ஏன் அடிக்கிறீர்கள் ?" என்று கேட்டார். " அந்தப் பெண்பிள்ளை தேவாலயத்தில் ஆற்ற வேண்டிய கடமையை வீட்டு விட்டு, சொல்லிக்கொள்ளாமல் ஒரு கல்யாணத்திற்குப் போய் விட்டாள். அதனால் ஆண்டவனது கைங்கர்யம் தடைப்பட்டது. அதனால்தான் அடிக்கிறோம்" என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் சிவாசாரியார் குலுங்கக் குலுங்க அழு தார். உடன் வந்த சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டிற்குத் திரும்பச் சென்ற பிறகு, சிவாசாரியார் காலில் அவர்கள் வீழ்ந்து வணங்கி, தாங்கள் கோவிலில் அழுத காரணம் யாது?" என்று கேட்டார்கள். அப்போது அவர் சொன்னார்; "அந்தப் பெண் பிள்ளை ஒரு நாள் இறைவனுக்குத் தொண்டு செய்யத் தவறினாள் என்று தர்மகர்த்தா அவளை அடித்து வேலை வாங்கினார். அதைப் போல யாராவது என்னை இளமையில் அடித்து, இறைவனுக்குத் தொண்டு செய்யும்படியாகச் செய்திருந்தால் நான் எப்போதோ உய்ந்திருப்பேனே!' என்று சொன்னாராம். துன்பத்தை வரவேற்று அதனால் தூய்மை பெறலாம் என்ற எண்ணம் அத்தகையவர்களுக்கு இருந்தது. பாரதப் போர் முடிந்தவுடன் தர்மபுத்திரருக்குப் பட்டாபிஷேகம் நடந்தது. பிறகு கண்ணன் துவாரகைக்குச் செல்லப் புறப்பட்டான். போவதற்கு முன் தன் அத்தை குந்தி தேவியிடம் சென்று, "உனக்கு ஏதாவது வேண்டுமா?" என்று கேட்டான். 'அப்பா, நீ ஊருக்குப் போகிறாயா? இனி அடிக்கடி உன்னைப் பார்க்க முடியாதா?" என்று கேட்டாள். "என் ஊரில் எனக்கு வேலை இருக்கிறது. இங்கே நான் செய்யவேண்டிய வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன. ஆகவே நான் போகிறேன். உனக்கு ஏதாவது வேண்டுமானால் கேள்' என்றான் கண்ணன். அவள் ஜபமாலை, ஜபமாலை, சிவலிங்கம், நார்மடி என்று ஏதாவது கேட்பாள் என்று நினைத்திருக்கலாம். ஆனால் குந்தி தேவி, "கண்னா, எனக்கு ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு துன்பம் வரும்படி அனுக் கிரகம் பண்ணு" என்றாளாம். அதைக் கேட்டுக் கண்ணன், "என்ன அத்தை, நீ ஜபமாலை, நார்மடி என்று ஏதாவது கேட்பாய் என்றல்