உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமர குருபரன் 173 "ஜபம் லவா எண்ணியிருந்தேன்?" என்றான். குந்தி தேவி, பண்ணுகிறவர்கள் எல்லாம் உன்னை நினைக்கிறார்களா? கையில் ஜபமாலை இருக்கும். உள்ளம் உலகத்தைச் சுற்றிவரும். நாள் தோறும் ஏதாவது எனக்கு ஒரு துன்பம் வந்தால் அந்தத் துன்பமே ஜபமாலையாக, கண்ணன் இருந்தால் இந்தத் துன்பம் வந்திருக்காதே என்று உன்னை நினைக்கச் செய்யும். அதனால்தான் நான் கேட் கிறேன், துன்பம் தா என்று " என்றாளாம். இப்படி அடியார்கள் துன்பத்தையும் இறைவனை நினைக்கின்ற சாதனம் என்று நினைப்பார்கள். ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவன் லாண்டரியில் துணியை எப்படிச் சலவை செய்கிறார்கள் என்பதை அறியாதவன். அழுக்குத் துணிகளை ஓர் இயந்திரத்தில் போட்டால் வெளுத்த துணிகளாக வந்துவிடும் என்று அவன் நினைத்திருந்தான். ஒரு சமயம் கிராமத் தில் உள்ள மாமன் வீட்டிற்குச் சென்றான். அங்கே குளத்தங்கரையில் ஒரு சலவைத் தொழிலாளி துணிகளை நீரில் நனைத்துக் கல்லில் அடித்துக் கொண்டிருந்ததைக் கண்டான். வேட்டி கிழிந்து போய் விடுமே என்று கூச்சலிட்டான் அந்தப் பையன். அவனுக்கு வேட்டி யைக் கல்லில் மோதினால்தான் அதன் அழுக்குப் போகும் என்று தெரியாது. தெரிந்தால் சந்தோஷப்படுவான். தெரியாததால்தான் கிழிந்து போகுமே என்று நினைத்தான். அதுபோல இறைவன் நமக்குத் துன்பம் தந்தால் நம்மிடத்தில் உள்ள அழுக்குப் போகும் என்று அன்பர்கள் எண்ணிக் கொள்வார். கள். அல்லாதவர்கள் இறைவன் கருணையில்லாதவன் என்று சொல் வார்கள். அவ்வண்ணம் நான்முகன், இத்தண்டம் ஏதமன் றுணர்வு நல்கி யானெனும் அகந்தை வீட்டித் தீதுசெய் விளைகள் மாற்றிச் செய்தது புனிதம் என்று கூறினான். சிவபெருமான் அவனுக்கு அனுக்கிரகம் செய்து, "நீ போய் உன் படைப்பு வேலையைப் பார்" என்று சொல்ல, அவன் போய் விட்டான். பிரணவ உபதேசம் சிவபெருமான் முருகப் பெருமானைப் பார்த்து, புன்முறுவல் பூத்து, தன்னுடைய கையால் அவனை அணைத்து, தன் துடையின்