தாரகன் வதை தேவர்கள் சிவபெருமானிடம் விண்ணப்பித்தல் இனி, தாரகனைச் சங்காரம் செய்த கதையைப் பார்ப்போம். இந்திரன் முதலிய தேவர்கள் சிவபெருமானிடம் வந்து சூரபன்மன் முதலிய அரக்கர்களால் தாங்கள் படும் துன்பத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். இறைவனை வழிபட்டு, எல்லோரும் சேர்ந்து விண்ணப்பம் செய்து கொள்ளும்போது அதற்கு ஆற்றல் அதிகமாகிறது. அவரவர்கள் இறைவனுடைய திருவருளைப் பெறவேண்டுமானால் தனித் தனியாக இருந்து தவம் செய்யலாம். ஆனால் உலகத்திற்கு நன்மை வரவேண்டுமானால் ஒற்றுமையாக இருந்து ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். இதைப் புராணங்கள் காட்டுகின்றன. இராவணாதி அசுரர்களால் துன்பப்பட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் தனித் தனியாக இருந்து கும்பிட்டு, எந்தக் காரியமும் நிகழவில்லை. ஆனால் அத்தனை பேர்களும் சேர்ந்து பாற்கடலில் சயனித்திருந்த திருமாலி னிடம் விண்ணப்பித்துக்கொண்டார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களும் சேர்ந்ததனால் ஒரு தனியான சக்தி உண்டாயிற்று. அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க, திருமால் இராமனாக அவ தாரம் செய்தார். கூட்டு முயற்சியினால் உண்டான பயன் இது. அதைப்போலவே இங்கு இந்திராதி தேவர்கள் எல்லோரும் சேர்ந்து சிவபெருமானிடம் சென்று எங்கள் துன்பத்தைப் போக்க வேண்டுமென்று சொன்னார்கள். முருகன் புறப்படுதல் என்று அப்போது சிவபெருமான், முருகப் பெருமானைப் பார்த்து, "நீ போய் அவர்களுடைய துன்பத்தைத் தீர்த்து வா அருளினான். "இந்த உலகத்திலுள்ள மக்களைத் துன்புறுத்தி, எல்லோருக்கும் வெவ்வேறு வகையான இடர்களை உண்டாக்கி, தேவலோகத்திலுள்ள தேவர்களுக்குத் துன்பத்தைத் தந்துகொண்டு மிக்க பலத்தோடு இருக்கிறான் சூரன். அவனையும், அவனைச் சுற்றி யிருப்பவர்களையும் அடியோடு அழித்து வேதநெறி நிலைத்திருக்கும் படியாகச் செய்யவேண்டும். இந்திரனுக்குப் பழையபடி அவன்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/201
Appearance