182 அரசை கந்தவேள் கதையமுதம் நீ அளித்து, தேவர்களது துயரைத் துடைக்க புறப்பட்டுப் போகவேண்டும்" என்று சிவபெருமான் சொன்னான். பாரினை அலைத்துப் பல்லுயிர் தமக்கும் பருவரல் செய்து விண் ணவர்தம் ஊரினை முருக்கித் தீமையே இயற்றி உலப்புறா வன்மைகொண் டுற்ற சூரனை அவுணர் குழுவொடும் தடிந்து சுருதியின் நெறிநிறிஇ மகவான் பேரா சளித்துச் சுரர்துயர் அகற்றிப் பெயர்திஎன் றனன்எந்தை பெருமான். (விடை பெறு, 35.) (பருவரல் - துன்பம். முருக்கி - அழித்து. உலப்புற - அழிவில்லாத, தடிந்து அழித்து. கருதியிள் நெறி நிறீஇ - வேத நெறியை நிலை நிறுத்தி, மகவான் - இந்திரன்.] இங்கே, வேதநெறியை நிலைநிறுத்தி வா " என்று முருகனிடம் சிவபெருமான் சொன்னான். 11 இந்த நாட்டிற்கே அடிப்படைச் சுருதியாக இருப்பது வேதம்; நமது நல்ல பழக்கங்களுக்கு எல்லாம் ஆதாரமாக இருக்கின்றது. வேதநெறி தழைத்தோங்க ஞானசம்பந்தப் பெருமான் திரு அவதாரம் செய்தார் என்று சேக்கிழார் பாடுவார். அசுரர்களுடைய நெறியை மாற்றி, சுருதிகளின் நெறியை நிறுவுவாயாக என்று சிவபெருமான் பணிக்கிறான். அப்படி உத்தரவிட்டபோது 11 ருத்திரர்களையும், 11 வகை யான ஆயுதங்களாக்கி முருகப் பெருமான் திருக்கையில் கொடுத் தான். உலக்கை,கொடி,வாள், வச்சிரம், அம்பு, அங்குசம், மணி, தாமரை,தண்டம், வில், மழு என்று 11 ஆயுதங்களாக ருத்திரர்கள் மாறி முருகன் கையில் இருந்தார்கள். பின்பு ஒரு வேலை முருகன் கையில் தந்தான். இப்படியாகப் பன்னிரண்டு திருக்கரங்களிலும், பன்னிரண்டு படைகள் அமைந்தன, பொன்திகழ் சடிலத் தண்ணல்தன் பெயரும் பொருவிலா உருவமும் தொன்னான் நன்றுபெற் றுடைய உருத்திர கணத்தோர் நவிலரும் தோமரம் கொடிவாள் வன்திறல் குலிசம் பகழிஅங் குசமும் மணிமலர்ப் பங்கயம் தண்டம் வென்றிவில் மழுவும் ஆகிவீற் றிருந்தார் விறல்மிகும் அறுமுகள் கரத்தில். (விடை பெறு.37.) [சடிலம் -சடை. தோமரம் - உலக்கை. குளிசம் - வச்சிரம். கதை 了 தண்டம் கை பகழி -அம்பு.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/202
Appearance