உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் செந்தூர் வருதல் 199 சைவ வைணவ வேறுபாடு தெரியாது. அவர்கள் பாலாஜி என்று சொல்வதனால் அங்கே முருகன் எழுந்தருளியிருந்தான் என்ற குறிப்புக் கிடைக்கிறது. திருவேங்கடத்திலுள்ள சுவாமியின் கையில் சக்கரத்தையும், சங்கையும் வைக்கிறார்கள். இயற்கையாக அந்த மூர்த்தியின் திருக்கரத்தில் எந்த ஆயுதமும் இல்லை. அருணகிரிநாத சுவாமிகள் நான்கு திருப்புகழ் திருவேங்கடமலை பற்றிப் பாடியுள்ளார். 'திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே என்று ஒரு பாட்டு வருகிறது. ஒரு கோவிலுக்குப் போனால் வெளியிலிருந்து அந்தக் கோவி லின் மதிலைப் பார்த்தாலே அது இன்ன கோவில் என்று தெரிந்து கொள்ளலாம். சிவபெருமான் கோவிலாக இருந்தால் மதிலின் மேல் இடபம் இருக்கும். கணபதி கோவிலாக இருந்தால் மூஷிகம் இருக்கும். திருமால் கோவில் என்றால் கருடன் இருக்கும். முருகன் கோவில் மதில்மேல் மயிலைக் காணலாம். சோழ நாட்டில் அம்பிகையின் சந்நிதியில் நந்திதான் இருக்கும். தொண்டை நாட்டில் பல கோவில்களில் அம்பிகைக்கு முன்னால் சிங்கம் இருப்பது வழக்கம். திருவேங்கடத்திலுள்ள திருக்கோவி லின் மதில்மேல் சிங்கந்தான் இருக்கிறது. ஒரு சமயம் ஸ்ரீ காமகோடி ஆசாரியசுவாமிகள் அவர்களை நான் தரிசித்த போது அவர்கள் இதைப்பற்றிச் சொன்னார்கள். திரு வேங்கடத்திலுள்ள கோவில் மதில்மேல் சிங்கம் இருக்கிறதே; எதற்கு ?" என்று கேட்டார்கள். அவர்களே பின்பு விளக்கினார்கள். " அது ஒரு சக்தி க்ஷேத்திரம். கௌமாரி, வைஷ்ணவி ஆகிய இரண்டு சக்திகளும் சேர்ந்து அங்கே எழுந்தருளியிருக்கிறார்கள். இரண்டு சக்திகளும் சேர்ந்து இருப்பதனால்தான் வேங்கடேசுவரரு டைய பரிவட்டம் 36 முழமாக இருக்கிறது. நம்முடைய நாட்டில் ஒரு பெண்ணுக்கு 18 முழம் என்று சொல்வார்கள். இரண்டு பெண்கள் சேர்ந்து இருப்பதால் 36 முழம். இந்த 36 முழத்தை நெய்வதற்கு அங்கே தனியாக நெசவுக்காரர்கள் இருக்கிறார்கள்.' இப்படி ஆசார்ய சுவாமிகள் சொன்னார்கள். .. சிவபெருமானும் திருமாலும் சேர்ந்து ஒன்றாக இருக்கிற உருவம் என்று திருவேங்கடமுடையானை ஆழ்வார் பாடியிருக்கிறார்.