உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 கந்தவேள் கதையமுதம் வேங்கட சுப்பிரமணியன் என்ற பேரைப் பல பேர் வைத்துக்கொள் வார்கள். அதுவும் திருமாலுடன் சுப்பிரமணியன் இருப்பதைத் தெரிந்து கொள்வதற்குச் சான்று. சிலப்பதிகாரத்தில் வேங்கடத் தில் திருமால் இருந்ததாகச் செய்தி வருகிறது. ஆகவே, அங்கே திருமால் கோவிலும் முருகன் கோவிலும் தனித்தனியாக இருந்திருக்க லாம் என்று கூறுகிறார்கள். அங்கே உள்ள திருக்குளத்தின் பெயர் சுவாமி புஷ்கரிணி என்பது. சுவாமி என்றால் முருகன். முருகன் அந்தக் குளத்தை உண்டாக்கித் திருமாலுக்குப் பூஜை செய்தான் என்று வைணவ புராணம் சொல்கிறது. முருகன் எழுந்தருளிய கோவிலாகையால் அந்தத் திருக்குளத்திற்கு அந்தப் பெயர் வந்தது என்றும் சொல்லலாம். கச்சியப்ப சிவாசாரியார் திருவேங்கடத்தில் முருகன் இருந்தான் என்பதற்கு ஒரு வரலாற்றைச் சொல்கிறார். ஒரு சமயம் கைலாயத் தில் சிவபெருமானும் அம்பிகையும் முருகனுடன் வீற்றிருந்தபோது, முருகப் பெருமான் அம்பிகையிடம் ஏதோ கேட்டான். அம்பிகை கோபித்துக்கொண்டாள். பொதுவாகக் குழந்தைகளை அதிகமாகக் கோபித்துக் கொள்பவர் தந்தையார். தாயோ எதைக் கேட்டாலும் பதில் சொல்வது வழக்கம். ஆகவே, பிள்ளைகள் தந்தையரிடத்தில் அஞ்சி நடப்பார்கள்; தாயிடத்தில் சுதந்தரமாகப் பழகுவார்கள். அம்பிகை கோபித்துக்கொண்டதனால், முருகள் தானும் கோபம் கொண்டு, "நான் இங்கே இருக்கமாட்டேன். வேறு ஒரு மலைக்குப் போகிறேன்' என்று பாதாளத்தின் வழியே வந்து, வேங்கட மலை யின் குகை வழியே வெளிப்பட்டானாம். பிறகு அம்பிகை அழைக்க, மறுபடியும் கைலாயத்திற்குப் போய்ச் சேர்ந்தானாம். அப்போது அவன் தங்கின இடம் திருவேங்கடம். முன்பு தான் தங்கிய வேங்கடகிரியைப் பார்த்தான்' என்று கந்தபுராணக்காரர் சொல்கிறார். அண்டம் மள்னுயிர் ஈன்றவ ளுடன்முனி வாகித் தொண்ட கம்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து மண்டு காதலத் தேகியே ஓர்குகை வழியே பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான். (வழிநடைப்.6) (முனிவாகி- கோழித்து. தொண்டகம் - குறிஞ்சி நிலத்துக்குரிய பறை. சுவாமி முருகன். தன் மால் வரை - கந்தகிரி ]