202 கந்தவேள் கதையமுதம் 36 என்று பாட்டுள் முந்துற வந்து நிற்கும் முருகாற்றுப் படைமொ ழிந்தான்' சிவபிரகாசர் சீகாளத்திப் புராணத்தில் சொல்கிறார். நக்கீரர் பாடிய அந்தப் பாட்டு, பத்துப்பாட்டில் ஏன் முதலாக இருக்கிறது என்று கிந்திக்கவேண்டும். "நக்கீரர் எல்லாப் புலவர் களையும் விடப் பெரியவர். ஆகையால் அவர் பாட்டை முதலில் வைத் தார்கள் " என்று சொல்லலாம். ஆனால் அந்த நக்கீரர் பாடிய நெடு நல்வாடை பத்துப்பாட்டில் ஏழாவதாக இருக்கிறது. நக்கீரருக்குப் பெருமை தருவதானால் திருமுருகாற்றுப்படையை ஒட்டியே, அவர் பாடியுள்ள நெடுநல்வாடையையும் வைத்திருக்க வேண்டும். " அப்படி வைக்காமையினால் வேறு ஏதாவது காரணம் இருக்கவேண்டும். நக்கீரர் பழமையானவர், அதனால் அப்படி வைத்தார்கள் என்று சொல்லலாம். அவரை விடப் பழமையான கபிலருடைய குறிஞ்சிப் பாட்டு, பத்துப் பாட்டில் எட்டாவதாக இருக்கிறது. இவற்றை எல்லாம் காரணமாகச் சொல்ல முடியாது. பின்பு திருமுருகாற்றுப் படையை மூதலில் வைத்ததற்குக் காரணம் என்ன? அது முருகப் எல் பெருமானைப் பற்றிப் பாடினது. ஆதலின் சங்க நூல்களுக்கு எ லாம் முதலாவதாக வைத்தார்கள். தமிழர்கள் முருகனை மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் பூஜிப் பார்கள். எல்லா நிலங்களிலும் உயர்ந்ததாகிய குறிஞ்சி நிலத்திற்குத் தலைவனாக வைத்தார்கள். மிக உயர்ந்தவர்களை வழிபடுகிற போது உயர்ந்த இடத்தில் வைத்துப் பூஜிக்க வேண்டுமென்று சொல்வது வழக்கம். நாம் கட்டிய பெரிய பெரிய மாளிகைகளை விட இறைவன் இயற்கையாகப் படைத்த மலைகள் உயர்ந்த இடங்கள். ஆகவே, "உன்னை மலைகளில் வைத்துப் பூஜிக்கிறோம் " என்று தமிழர்கள் முருகனைக் குறிஞ்சி நிலத் தெய்வமாக வழிபட்டார்கள். சைவசித்தாந்தத்தில் தத்துவங்கள் 36 என்று, சொல்வார்கள். அவை மூன்று தொகுதியாகப் பிரியும். சிவ தத்துவம், வித்தியா தத்துவம், ஆத்ம தத்துவம் என்று மூன்று வகை. 36 தத்து வங்களைப் போல இருப்பவை 36 பழைய நூல்கள். சிவதத்துவம், வித்தியா தத்துவம், ஆத்ம தத்துவம் என்று தத்துவங்களில் மூன்று. வரிசை இருப்பதுபோலப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் >}
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/222
Appearance